என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆய்வுக்கூட்டம்"
- ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டப் பணிகள், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் சட்டமன்ற பேரவை நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (பொது) ஜெகதீசன் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி) உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேனி மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- மாதந்தோறும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து அவர்களின் வளர்ச்சிநிலையை மேம்படுத்திட அறிவுறுத்தப்பட்டது
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
மாவட்டத்தில் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை விரைவாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மாவட்ட ஆரம்பகால குழந்தைகள் மருத்துவ ஆய்வுப்பிரிவு மற்றும் நோய்வாய்பட்டு பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளுக்கு அனுப்பி விரிவான மருத்துவ பரிசோதனை செய்து வட்டாரம் வாரியாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
மேலும், விடுபட்ட குழந்தைகளை விரைந்து மருத்துவ ஆய்விற்கு உட்படுத்தி அதன் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
போஷான் டிராக்கர் செயலியில் ஒவ்வொரு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்த்து அதனை உறுதி செய்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் இணைக்கும் பணியினை நிறைவு செய்திட வேண்டும்.
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் போஷான் டிராக்காரில் வருகை பதிவுகள் மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எடை மற்றும் உயரம் முறையாக எடுத்து பதிவேற்றம் செய்திடவேண்டும்.
மாதந்தோறும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி விடுபடாமல் பதிவிடவும், மாதந்தோறும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து அவர்களின் வளர்ச்சிநிலையை மேம்படுத்திட சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
- சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
- வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.
உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்