search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசிம் ஜாபர்"

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
    • இன்றைய ஆட்டத்தில் டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டார்

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.

    அணியின் வழக்கமான கேப்டன் பவுமா, முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2-வது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. 2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தினார். இவ்வாறு 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், "ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளனர்.
    • ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக வாசிம் ஜாபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்னதாக உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார்.

     

    முன்னதாக ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்த வாசிம் ஜாபர் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

    அவருடைய 11 பேர் கொண்ட இந்திய அணி:-

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    • பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.

    டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    ×