search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சாவு"

    • கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது65). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் தீர்த்தகிரிவலசைக்கு வந்தபோது எதிரே வந்த கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக ராமசாமி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் சிடுவம்பள்ளி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது70). விவசாயி.

    இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக ராமசாமி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் ஏரியூர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த என்ன காரணத்திற்காக? ராமசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 65).

    விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் வரைசென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரபத்திரனை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
    • திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து மணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார் என்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலு (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பக்கத்து நிலத்துக்காரர் பாலுவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பாலுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்செ ன்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார். எனவே, அது தொடர்பான வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.

    இதையடுத்து போலீசார், வருவாயத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரிய வரும் என்பதால், சந்தேக மரண வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணப்பா (வயது52). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    அப்போது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுசம்பவம் குறித்து சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த எட்டிக்கல் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது40). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னை மரத்தில் ஏறி தென்னை ஓலையை வெட்டியுள்ளார்.
    • அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). இவர் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மகளுக்கு நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் பந்தல் போடுவதற்காக தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தென்னை ஓலையை வெட்டியுள்ளார்.

    அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சண்முகம் தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொப்புர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் பூச்சி செல்வம் மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பைரநத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்த்து வந்தனர். இதனால் செல்வம் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

    இதில் மன விரக்தி அடைந்த செல்வம் கடந்த 20-ந்தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் இவரது உடலை மீட்டு பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயியான இவர் கடந்த மாதம் 31-ந் தேதி தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.
    • சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இவர் இரவு பூச்சி மருந்து குடித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது55). விவசாயி.

    இவர் இரவு பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×