search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் மாயம்"

    • மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா?
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தலக்குளம் பட்டரிவிளை யில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் பகுதி மாணவிகள் உட்பட பலர் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் விடுதியில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதுபோல் ஒரு மாணவர் வெளியே சென்று பின்னர் திரும்பவும் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரி-பள்ளி மாணவிகள் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி லிங்காபுரம் காலனியை சேர்ந்தவர் தங்கசாமி(57). இவரது 18 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு தங்கசாமி மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

    கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து அவரது மகளும், ஒரு வாலிபரும் வந்தனர். அந்த வாலிபரை பிடித்து தங்கசாமி யார் என விசாரித்துள்ளார். அப்போது பாரதி நகரை சேர்ந்தவன் என கூறிய வாலிபர் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தங்கசாமி, வீட்டின் முன்பு வைத்து மகளை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்குள் சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது மகள் அங்கு இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.

    இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தங்கசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சித்திரன்(57). இவரது 16 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அதிகாலையில் காண வில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபு த்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சித்திரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காவலாளி கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதே போல அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த 3 கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கரகப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி.இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியா நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பன்னிக்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்று ஐயப்பன் (வயது19) என்பவர் திருமணம் செய்ய கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது .

    இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேறி பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி.

    இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மருதுப்பட்டி மோட்டூர் பகுதிய சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பவர் கடத்திச் சென்றதாக தெரிய வந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 17 வயது மகள் மாயமாகிவிட்டதாக பாலக்கோடு போலீசில் புகார் செய்துள்ளார்.
    • யோகலட்சுமியை சீனிவாசன் பஸ் ஏற்றி அனுப்பியுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பெரிய கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி யோகலட்சுமி (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சீலேபள்ளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிய யோகலட்சுமியை சீனிவாசன் பஸ் ஏற்றி அனுப்பியுள்ளார்.

    ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் யோகலட்சுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே தனது மனைவி மாயமானது குறித்து சீனிவாசன் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதேபோல மாரண்ட அள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் தனது 17 வயது மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், கோவில் விழாவுக்காக ஊருக்கு வந்த அவர் காணாமல் போய் விட்டதாகவும் மாரண்ட அள்ளி போலீசில் புகார் செய்துள்ளார்.

    பாலக்கோடு அருகே கடைமடை பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் தனது 17 வயது மகள் மாயமாகிவிட்டதாக பாலக்கோடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    • கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.
    • மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகள் கார்த்திகா (வயது19). இவர் சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதே கல்லூரியில் படித்து வருபவர் சாத்தான்குளம் கொழுந்தட்டு மேலத்தெருவை சேர்ந்த ராபர்ட் செல்வன் மகள் எப்சிபா செல்வகுமாரி (20). கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.

    ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக அச்சுதன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் மாணவிகள் மாயமாகி 6 நாட்கள் ஆன பின்னரும் அவர்களை கண்டுபிடித்து தர போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அவர்களை மீட்டு தர வேண்டும் என கார்த்திகாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    இதற்கிடையே வருடாந்தர ஆய்வுக்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் சாத்தான்குளம் சென்றார். அப்போது மாயமான மாணவிகள் விவகாரத்தில் விசாரணை எந்த நிலையில் உள்ளது. ஏதேனும் துப்பு கிடைத்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சி.சி.டி.வி. காட்சிகள், செல்போன் சிக்னல்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது விரைந்து விசாரணை நடத்தி மாணவிகளை உடனடியாக மீட்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தினர்.

    இந்நிலையில் மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீர்த்தனா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • 2 மாணவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை துடியலூர் அருகே உள்ள அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி.

    இவரது மகள் கீர்த்தனா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கீர்த்தனாவை தேடி வருகிறார்கள்.

    மதுக்கரை அருகே உள்ள மரப்பாலத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சுவேதா (19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இது குறித்து மாணவியின் தந்தை செல்வராஜ் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சுவேதாவை தேடி வருகிறார்கள். 

    • கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாகரெத்தினப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா .இவரது மகள் இந்துமதி (வயது 21).தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. படித்து வருகிறார். இவர் நேற்று வீட்டைவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கிரிஷ்ணகிரி போலிஸில் இந்துமதியின் தந்தை கிருஷ்ணப்பா தந்துள்ள புகாரில் திம்மராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது மகள் இந்துமதி கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ராயக்கோட்டை அருகே யுள்ள ரஹமத் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் தன்யஸ்ரீ (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார். இது குறித்து ராயக்கோட்டை போலீசில் ஆனந்தன் தந்த புகாரில் ராயக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த விவேக் என்ற வாலிபர் தனது மகளை கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயமானார்கள்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் குட்டைகார தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 35). இவரது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பூமாது மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் 12 -ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் உறவினர் 12- ம் வகுப்பு மாணவி 2 பேரும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
    • 2 மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கொப்பூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மூத்த மகள் மோகனப்பிரியா (17). இவர் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.

    மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மோகனப்பிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மோகனப்பிரியாவை தேடி வருகிறார்கள்.

    இதேபோல திருவள்ளூரை அடுத்த பூண்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சங்கீர்த்தனா (15). தேர்வில் தோல்வி அடைந்தார். அவரும் மாயமாகி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×