என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுமான பணி"
- பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
- மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
- பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.
- மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில் எல்சி 117 ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, கீழ்மட்ட பாலம் 300 மீட்டர் அளவில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.
இதனால் ஆத்தாளூர், நாடாகாடு, முனி கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றி பேராவூரணி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வர வேண்டிய அவல நிலை உள்ளது.
இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.
கோயிலுக்கு மாவடுகுறிச்சி, இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆத்தாளூர் கிரா மத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்த திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் கனிம வளங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நாகமணி பிரபாகர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, கலு கொண்ட பள்ளி ஊராட்சி மன்ற துணைதலைவர் சைத்ரா சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, மஞ்சுநாத், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
- தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர்- சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில், அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்து உள்ளது.
அகழாய்வின் போது கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மதுரை கோட்ட பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, கீழடி கட்டிட மைய செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு-பொறுப்பு) த.ச.சஜின் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்று வரும் சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் அந்த கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்களும், தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தூத்துக்குடி, டான்ஜெட்கோ செயற்பொறியாளர், பெல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
- வாரச்சந்தையை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை உடன்குடி மெயின் பஜாரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திங்கட்கிழமை தோறும் செயல்படும் இந்த சந்தையில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வருவார்கள்.
சுற்றுபுறபகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை முதல் இரவு வரை வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வார்கள்.
இந்த வாரச்சந்தையை நவீனமாடலில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று இங்கு வரும் வியாபாரி களும், பொதுமக்களும், கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஏற்பாட்டில் ரூ1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க விழாவும்நடந்தது.
தற்போது கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணியை உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறிய தாவது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி தொடங்கப்பட்டது. இப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இப்பணியை விரைவில் முடித்து திறப்பு விழாநடத்த வேண்டும் என்று அமைச்சரும், பேரூராட்சி நிர்வாகமும் மிகுந்தஆவலாய் உள்ளது.
எனவே இப்பணி விரை வில் முடியும் என்றார். அப்போது, கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், சரஸ்வதி பங்காளர், பிரதீப் கண்ணன், ராஜேந்தி ரன், முத்துசந்திராசிவா, அன்புராணி, சரஸ்வதி மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி ஊழி யர்கள் உடன் சென்றனர்.
- அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர்.
- ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் மோரமடுகு பஞ்சாயத்து உஸ்தலஹள்ளி கிராமத்தில் 160 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 4 கி.மீ., தொலைவில் உள்ள அகரம் கிராமத்திற்கு சென்று வந்தனர். இதனால் தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்காக இடத்தை பொதுமக்கள் அளித்தனர். அங்கு, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதே போல், கிருஷ்ணகிரி பையனப்பள்ளி பஞ்சாயத்து திருமலை நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியை துவக்கி வைக்க சென்ற எம்எல்ஏ., அசோக்குமாரிடம், அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பஞ்சாயத்து நிதி மற்றும் எம்எல்ஏ., நிதியில் இருந்து முதலில் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து இதற்கான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் காசி, ஜெயராமன், பஞ்., தலைவர் பிரதாப், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
- ரூ.2 கோடியே 55 லட்சத்தில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி :
சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2019-2020-ம் ஆண்டின் கீழ் நடைபெற்ற தி உயிரி அகழ்வு முறையில் (பயோமைனிங்) மரபு கழிவுகளை அகற்றும் பணி முடிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து திருவட்டார் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 55 லட்சத்தில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் வழிகள், கடைகள் அமைக்கப்படும் விதம் ஆகியவற்றை கேட்டறிந்து பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பஸ் நிலையத்தை வடிவமைத்து கட்டுவதற்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து திருவட்டார் பேரூராட்சி நபார்டு நிதி உதவி திட்டம் 2021-2022-ம் ஆண்டு திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் பாலன்கோணம்-திருவரம்பு பூங்கா சாலை மேம்பாடு பணியை ஆய்வு செய்தார். மேலும் திற்பரப்பு பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023-ம் ஆண்டு ரூ.1 கோடியே 46 லட்சத்தில அமைக்கப்படும் எரிவாயு தகன மேடை பணியையும் அவர் ஆய்வு செய்து ஒப்பந்த காலத்திற்குள் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது திருநெல்வேலி சரக பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் தர்மராஜ், நாகர்கோவில் மண்டலம் பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, நாகர்கோவில் மண்டல உதவி செயற்பொறியாளர்கள் புஷ்பலதா, மாரியப்பன், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கலெக்டர் ஆய்வு
- தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணியை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் விரைந்து கட்டவும் தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது.
- கட்டுமான பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேத்தூரை தலைமை இடமாக கொண்டு கால்நடைகளுக்கு ஆண்டாண்டு காலமாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனை குறித்து கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் ராஜராஜேசுவரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர் பால சுப்பிரமணியன், பேரூர் சேர்மன் பால சுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச் செல்வம் மற்றும் பேரூர் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
- திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அவினாசி:
அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.மகப்பேறு மருத்துவப் பிரிவில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களும், 16 அறைகளில் 64 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அங்கு வந்த சோலை நகா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.தற்காலிக நடவடிக்கையாக நாள்தோறும் வெளியாகும் கழிவுநீா் லாரிகள் முலம் வெளியேற்றப்படும் என்று ஆ.ராசா உறுதியளித்தாா்.
ஆய்வின்போது பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.