என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளைஞர் காங்கிரசார்"
- அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- போராட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கன்னியாகுமரி :
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஐ.என். டி.சி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் மில்டன் கண்டன உரை ஆற்றினார்.
முன்னாள் திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவதாசன், திங்கள் நகர் பேரூராட்சி துணைத் தலைவர் ரீத்தாம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பொய் வழக்கை பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
- காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
- மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இலவரசன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று தென்காசி ரெயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இலவரசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன் மாவட்ட துணை த்தலைவர் சங்கை கணேசன், சர்புதீன்,இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ரமேஷ்,
வாசுதேவநல்லூர் வட்டார தலைவர் ஏபிடி மகேந்திரன், தேங்காய் சித்திக், நகர தலைவர் பால்ராஜ்,கூட்டுறவு சொசைட்டி தலைவர் சுரேஷ், மாடசாமி ஜோதிடர், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் ரபீக், கடையநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் இப்ராகிம்,
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார், துணைத்தலைவர் ரிஸ்வான், நகர பொருளாளர் ஈஸ்வர், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரபீக், சமூக ஊடகப் பிரிவு அப்துல் காதர், செங்கோட்டை நகர தலைவர் ராஜீவ் காந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முஹம்மது மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்