search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் கண்ணன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக காஞ்சிபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பாலாறு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் ஆம்னி வேனில் முன் பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் வேனை ஓட்டி வந்த பெருமாள் வேனில் சிக்கி உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து, கடப்பாரை கொண்டு ஆம்னி வேன் முன் பக்கத்தை நெம்பி படுகாயம் அடைந்த வேன் டிரைவர் பெருமாளை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது.
    • விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரியவசந்தி (வயது52). இவர்கள் 2 பேரும் நேற்றிரவு பண்டாரகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது முத்துச்சாமி புரம் அருகே நான்கு வழிச்சாலை பாலத்தில் அவர்கள் சென்ற போது அவர்களது பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மரியவசந்தி தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பால்ராஜிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. அந்த குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியிலும், பால்ராஜ் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் குமார் என்பவருடன் பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    இருளஞ்சேரி அருகே வந்த போது எதிரே பேரம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சக்கரபாணி, குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் சக்கரபாணி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விபத்துக்கு காரணமான வளைவு பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததே விபத்துக்கு காரணம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
    • விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக ஆரல்வாய்மொழி உள்ளது. திருநெல்வேலி-நாகர்கோவில் 4 வழிச்சாலையில் உள்ள இந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகின்றன.

    இங்குள்ள வெள்ளமடம் அருகே உள்ள லாயம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன கலைஞர்கள் வந்த கார், எதிர்திசையில் பாய்ந்து அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள்.

    விபத்துக்கு காரணமான வளைவு பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததே விபத்துக்கு காரணம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அங்கு தடுப்பு சுவர் கல் வைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அதன்மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருவது பலருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறது. நேற்று வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற வேன் சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 19 பேர் உயிர் தப்பினார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து மார்த்தாண்டத்தை நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. இந்த பஸ் வெள்ளமடம் அருகே உள்ள குமரன்புதூர் பகுதியில் வந்த போது, எதிரே மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதற்கு வழி விட முயன்றபோது, அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியாவில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 57), எலியாட் (9), களியக்காவிளையை சேர்ந்த ஷோபா (40), சுபின், அஜின், தெங்கம்புதூர் லட்சுமி (30), செண்பகராமன்புதூர் சங்கர் (45), காப்பிக்காடு விஜிலா (42) மற்றும் தோவாளையைச் சேர்ந்த ஒரு பெண் என 9 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்பு கல் தற்போது பல உயிர்களைப் பழிவாங்கும் எமன்ஆக மாறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தொடர் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    • இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த விஜயநல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

    மேலும் உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரிழந்த கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக நல்லூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

    • மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் உலகநாதன் (வயது35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை லாரியில் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சிவகிரியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். வாசுதேவநல்லூர் அருகே மேலபுதூரில் சென்றபோது பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

    காரை சாம்பவர்வடகரை அருகே உள்ள கரடிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை (55) என்பவர் ஓட்டி வந்தார். அந்த காரில் சிவகிரி அருகே நாரணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அண்ணாமலை (45), காளியம்மாள் (70), மாரியம்மாள், சாம்பவர் வடகரை மேலரதவீதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின் பக்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணாமலை, வெள்ளத்துரை, மாரியம்மாள், கனியம்மாள் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வாசுதேவநல்லூர் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அண்ணாமலையை சிவகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
    • விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    வடபழனியை சேர்ந்தவர் நிவேதா (வயது21). மறைமலை நகரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை உடன் வேலைபார்த்து வரும் நண்பர்கள் மனோஜ்குமார், சொர்ணரூபினி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு காரில் சென்றார். காரை அனுஷ் கண்ணன் என்பவர் ஓட்டினார். பொத்தேரியில் உள்ள கல்லூரி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தநர் மாணிக்கம் (57). இவர் ஒரகடம் சாலை சந்திப்பு அருகே ஜி.எஸ்.டி.சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

    • சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கார் மீது மோதியது.
    • விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக எம்.ஆர்.பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50). இவரது மனைவி மகேஸ்வரி (48).

    நேற்று முன்தினம் தம்பதி இருவரும் காரில் திருப்பதிக்கு சென்றனர்.

    காரை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் ஓட்டினார். நேற்று மதியம் தரிசனம் முடிந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. ஈடுபாடுகளில் சிக்கிய பிரபாகரன் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் டிரைவர் கணேஷ் பாபு படுகாயம் அடைந்தார்.

    விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக எம்.ஆர்.பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கிய கணவன்-மனைவி உடலை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த கார் டிரைவர் கணேஷ் பாபுவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது44). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் காரில் தஞ்சாவூருக்கு புறப்பட்டார். காரை தஞ்சையை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டினார். நேற்று தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் ஊருக்கு புறப்பட்டனர்.

    நேற்று நள்ளிரவு கார் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகில் உள்ள பழங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதியினர் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.

    இந்த விபத்தில் காரில் பயணித்த தில்லைநாயகி (வயது58), அருண்குமார்(32), ஜெசிந்தன்(11), ஹாரூன்(7), ஹேமவர்த்தன்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ரவிசங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு புறவழிச்சாலை பச்சையம்மன் கோவில் அருகே சென்னையை நோக்கி இன்று காலை கார் சென்று கொண்டிருந்தது. பின்னால் அரசு பஸ், வேன், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன.

    இந்த நிலையில் காரின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பின்னால் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன், அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதைத்தொ டர்ந்து வேனின் பின்புறம் லாரி மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேன், லாரி பலத்த சேதம் அடைந்தது. விபத்து காரணமாக திருச்சி- சென்னை மார்க்கத்தில் உள்ள புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 28). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் குமரிக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.

    காரை பிரவீன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை கார் நெல்லை கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது பிரவீன் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த அவரது உறவினர்களான கலந்தபனையை சேர்ந்த செல்வி(36), பிரதீபா(36), டேவிட், சிறுமி ஆதரா ஸ்ரீ (7), காரை ஓட்டி வந்த பிரவீன், அவரது மனைவி சர்மின் விஜின்(27) ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.
    • அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பசும்பொன்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றி உள்ள 60 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு சுற்றுலா பஸ்சில் சென்றனர்.

    அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு மானாமதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அபிராமத்தை அடுத்துள்ள முத்தாதிபுரம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

    டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 13 ஆண்கள், 8 சிறுவர்-சிறுமிகள் என மொத்தம் 41 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.

    அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பஸ் டிரைவர் செல்லம்(56) கால் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், சந்தீப்வர்ஷன் (13) என்ற சிறுவன் தலையில் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்து வமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

    காயமடைந்த மீதமுள்ள 39 பேரில் சிலர் சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    ×