search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • தெய்வகுமாரின் மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதி சாலையில் விழுந்ததில் கால் மற்றும் கை பகுதியில் காயமடைந்தார்.
    • திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாலங்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் தெய்வக்குமார் (வயது 35). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், திருவள்ளூர்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூடல்வாடி அருகே வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எந்தவித சிக்னலும் செய்யமால் திடீரென திரும்பி உள்ளார். இதனால் தெய்வகுமாரின் மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதி சாலையில் விழுந்ததில் கால் மற்றும் கை பகுதியில் காயமடைந்தார்.

    இதையடுத்து, அவரை மீட்ட வாகன ஓட்டிகள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின்பேரில், திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஊட்டி:

    சென்னை மதுராந்தகத்தை சேர்ந்தவர்கள் அருணகிரி(45), சம்பத்(40), செந்தில்(48), சத்தியா(35), பூவனம்(45). உறவினர்களான இவர்கள் 5 பேரும் விடுமுறையையொட்டி சில தினங்களுக்கு முன்பு நீலகிரிக்கு சுற்றுலாவுக்கு வந்தனர்.

    பின்னர் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர். இவர்களது கார் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதனால் காரில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த தனியார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

    இதில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய 5 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், மருத்துவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார்.
    • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது39). இவரது மனைவி சாந்தினி. இவர்களுக்கு சாரா (3) என்ற மகள் உள்ளார். பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார். அவர்கள் இன்று அதிகாலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் காயமடைந்தனர்.

    • பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.
    • விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் ஊராட்சி தாங்கல் காலனியை சேர்ந்தவர் ஹரி (வயது 26). இவர் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடியில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.

    பஸ் கனகம்மாசத்திரம் அருகே உள்ள பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இந்த விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட சக பயணியர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதேபோல். திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (51). இவர் நேற்று முன்தினம் மாலை அருங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு செல்லும் தனியார் மினி பஸ்சில் ஏற முயன்ற போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், வலது கால் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த பாண்டியனை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படப்பை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கனரக லாரி பஸ்சின் பக்கவாட்டில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பி.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50). அரசு பஸ் டிரைவரான இவர் தாம்பரத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டக்டர் ஜெய்சங்கருடன் வேலூர் நோக்கி வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் படப்பை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சில் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    படப்பை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கனரக லாரி பஸ்சின் பக்கவாட்டில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. இதில் பஸ்சின் முன்பக்கம் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுங்கி சாலையில் சிதறியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு பணியாற்றும் 20 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை பஸ் நேற்று மாலை வண்டலுார்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்றது. ஒரகடம் அருகே பஸ் சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 23 பேர் படுகாயம்

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பெண் தொழிலாளர்கள், டிரைவர் உள்ளிட்ட 3 ஆண்கள் என மொத்தம் 23 பேர் படுகாயமடைந்தனர்.

    அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    • விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி இன்று காலை அரசு பஸ்(எண்97) சென்று கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லக்ஷ்மபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சின் பின்பகுதி முழுவதும் நசுங்கியது. சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    வேலூர்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் நிஷாந்த் (4) நேற்று முன்தினம் இவர்கள் வேலூர் ஆர் என் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.நேற்று மாலை மீண்டும் காஞ்சிபுரத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    சத்துவாச்சாரி வசூரில் உள்ள அம்மன் கோவில் எதிரே சென்றபோது பின்னால் வந்த பைக் சரவணன் பைக் மீது மோதியது.இந்த விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அதேபோல பின்னால் பைக்கில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வழியாக சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கீதா அவரது 16 வயது மகன் காரில் சென்னை நோக்கி வந்தனர்.

    விபத்தை பார்த்த உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். 4 வயது குழந்தையை மீட்டு காலதாமதம் இன்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அந்த நேரத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

    காயமடைந்த நிஷாந்துக்கு கீதா விரைவாக ரத்தினகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல போலீஸ் சூப்பிரண்டு தனது காரை வழங்கினார்.

    அதில் தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

    குழந்தையை கீதா தனது தோளில் சுமந்தபடி வேகமாக தூக்கிக்கொண்டு ஓடி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தன்னுடைய குழந்தை போல நினைத்து கீதா விபத்தில் காயம் அடைந்த குழந்தையை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததை கண்ட டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை விரைவாக சேர்ப்பதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்றலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தச்சூர் கூட்டுரோடு பகுதியில் இருந்து பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது. மீஞ்சூரைச் சேர்ந்த டிரைவர் மணிவண்ணன் வேனை ஓட்டினார்.

    பொன்னேரி பஜாரில் அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது வண்டியில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்த தச்சூர் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த பூபதி (22) என்பவர் வேனை ஓட்டினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடீ எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கோடீஸ்வரன், லதா மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பொன்னேரியைச் சேர்ந்த மாரியம்மாள், ஆமூரைச் சேர்ந்த கலில், ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் படுகாயம் அடைந்த கோடீஸ்வரன், லதா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது.
    • வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அப்பகுதியில் உள்ள சிப்காட்டிற்கு செல்ல சரக்குவேன் ஒன்று சாலையை கடக்க முயன்றது.அந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் வேகமாக சரக்கு வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வேனை சிறிது தூரம் இழுத்து சென்று சாலை நடுவே இருந்த உயிர் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.

    இதில் உயர் கோபுர மின் கம்பம் சாலையில் இருந்த பெரிய போர்டு மீது சரிந்தது. பஸ்சில் சிக்கிய சரக்குவேன் முழுவதும் நசுங்கியது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சரக்குவேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விபத்து காரணமான அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெங்களூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தகவல் தெரிய வந்தது.
    • வேனில் இருந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து அலறினார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வடவள்ளி கிராமத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வாழைக்காய் வெட்டுவதற்காக இன்று காலை ஒரு வேனில் சிக்கரசம்பாளையம் கிராமத்துக்கு புறப்பட்டனர். வேன் காலை 7.30 மணி அளவில் வடவள்ளி முருகன் கோவில் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து அலறினார்கள்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காயம் அடைந்த நடராஜ் (30), கதிர்வேல் (36), தங்கவேல் (30), ரெங்கசாமி (33), துரைசாமி (38), சுரேஷ் (39), அம்மாசை (46), சுரேஷ் (38), திலகா (36), சித்ரா (31), சக்திவேல் (37), தங்கமணி (36), வைத்தீஸ்வரி (35) உள்பட 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக 6 ஆம்புலன்ஸ்கள் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தகவல் தெரிய வந்ததும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களது உறவினர்கள் ஏராளமான பேர் திரண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதியது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது.

    வண்டலூர்:

    திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது நேற்று அதிகாலை கூடுவாஞ்சேரி அருகே வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் ஒரு புறமாக கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் காயம் அடைந்தனர். இதனைப் பற்றி தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×