search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்புறத்தில் வந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர்கள் ராய நாகேஸ்வரராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ்.

    இவர்கள் இருவரும் பிரகாசம் மாவட்டம், கொமரோலுவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றனர்.

    நாகேஸ்வரராவ் காரை ஓட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் குண்டூர் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர்.

    பிரகாசம் மாவட்டம், அனந்தபூர்-அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது குந்தாவில் இருந்து மார்க்காபுரம் நோக்கி 8 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை மார்க்கபுரம் பி.எஸ். காலனியை சேர்ந்த ஷேக் அபித் உசேன் (46) என்பவர் ஒட்டி வந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்புறத்தில் வந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் ஆட்டோ சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.

    காரின் இடிபாடுகளில் சிக்கி நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வரா, ஆட்டோ டிரைவர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் உடல் நசங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவற்றில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா (12), டேனியல் (45) ரத்னாதேவி (9) ஆகியோர் இறந்தனர்.

    மேலும் ஆட்டோவில் பயணம் செய்த வேளாண் கல்லூரி 3 மாணவிகள் படுகாயத்துடன் மார்க்கபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது20). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். மேலும், தனது குடும்ப வறுமையின் காரணமாக பகுதி நேரமாக பெயிண்டிங் மற்றும் கொத்தனார் வேலைக்கும் சென்றார்.

    இந்நிலையில் அபினேஷ், மடவிளாகம் பகுதியில் வசித்து வரும் நண்பரான முரளி(21) என்பவருடன் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கன்னிகைப்பேர்-மஞ்சங்காரணை நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.. இதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் அதிவேகத்தில் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நண்பர் முரளி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் கம்பம் முறிந்து கார் மீது விழுந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி;

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லா. கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 38).

    இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட தனது காரில் நேற்று மாலையில் புறப்பட்டுள்ளார்.

    இன்று அதிகாலையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை கடந்து செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் வலது புறம் உள்ள மின்கம்பத்தில் வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் முறிந்து கார் மீது விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. என்றாலும் காரில் இருந்து அனைவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாடு ஒன்று குறுக்கே புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று காரை ஓட்டி வந்த சுதாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்கம்பம் சேதமடைந்ததை ஆறுமுகநேரி உதவி மின் பொறியாளர் ஜெபஸ்சாம் நேரில் பார்வையிட்டு அதனை உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    • இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வதற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணிகள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளா மாநிலத்துக்கு செல்வதற்காக அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் 6 பேர் இருந்தனர்.

    இதை தொடர்ந்து அந்த லாரி நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை வளைவு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி திடீரென தலை குப்புற கவிந்தது. இதில் லாரியில் வந்தவர்கள் கதறி துடித்தனர். மேலும் லாரியில் இருந்த தர்ப்பூசணி பழங்களும் ரோட்டில் சிதறி கிடந்தன்.

    இதில் லாரியில் வந்த சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்டனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (47), பழனியம்மாள் (44), ராமாயி (45), செவன் (48), மாரி முத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனை மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கேரளா மாநிலம் திருச்சிசூர் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரியாஸ் (34) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி பார்க்கிங் பகுதிக்கு அருகே தனியார் ஆம்னி பஸ் விபத்தால் 20 பேர் காயம் அடைந்தனர்.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த காசி (29) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி பென்னாகரம் பிரிவு சாலையில் அந்த ஆம்னி பஸ் வந்தது. அப்போது அங்கு லாரி பார்க்கிங் அருகே வாகனங்கள் மெதுவாக கடந்து செல்வதற்காக சாலையி்ல் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இருப்பதை கவனிக்காமல், வேகமாக வந்த ஆம்னி பஸ் மோதியது.

    இதில் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து உடனே தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ், ஜோசப், சுஜாதா, கீதா, மாளவிகா, எடிசன், ஹான்சன், ஆகிய 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர் உள்பட 13 பேர் லேசான காயங்களுடன் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த விபத்து குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • பலத்த காயமடைந்த சூர்யகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம், பரோடா தெரு பகுதியை சேர்ந்தவர் சூர்யகிருஷ்ணா (வயது21) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தனது நண்பர் மோகன்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கிண்டி நோக்கி நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அசோக்நகர் காசி தியேட்டர் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோகன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலை தடுமாறிய மோகன்ராஜ், சூர்யகிருஷ்ணா இருவரும் கீழே விழுந்தனர் இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த சூர்யகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சென்ற கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சூர்யகிருஷ்ணா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
    • விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் இன்று காலையில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 33) என்பவர் ஓட்டி வந்தார்.

    வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.

    இதில் பஸ்சுக்குள் சிக்கி பயணிகள் வலியால் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு ஓடி வந்து கண்ணாடியை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த டிரைவர் உள்பட 14 பேரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சுற்றுலா வேன் திடீரென முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாளையம் பகுதியில் இருந்து வெற்றி (வயது37), ரேவதி, ஜோதி உள்ளிட்ட 15 பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சுற்றுலா வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மதுரை புறவழிச்சாலையில் இன்று காலை வந்த போது சுற்றுலா வேன் திடீரென முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் வாகனத்தில் வந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தனி பிரிவு காவலர் பொன்பாண்டியன் மற்றும் போலீசார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் புன்னவனக்கட்டி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • விபத்தில் 18 பேர் காயமடைந்து உள்ளனர்.

    உத்தரகாண்டின் நைனிடால் நகரில் இருந்து கலாதுங்கி நோக்கி பஸ் ஒன்று நேற்றிரவு வந்து கொண்டிருந்தது. கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே வந்தபோது, அந்த பஸ் திடீரென சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் பொறுப்பு படை, தீயணைப்பு துறை மற்றும் நைனிடால் போலீசார் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.

    தொடர்ந்து, மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பஸ்சில் 32 பேர் இருந்துள்ளனர். 28 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் 18 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்த்வானி பகுதியில் உள்ள சுஷீலா திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒன்றிரண்டு பேர் இன்னும் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    • தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், சிட்கோ நகர் 46-வது தெருவை சேர்ந்தவர் பரத் (21). இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அம்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். பாடி மேம்பாலத்தில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பரத், பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 62). இவர் அமுல்யா, ஜெயபாண்டியன், நாராயணன் ஆகியோருடன் சபரிமலைக்கு காரில் சென்றார். இந்த காரினை சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஓட்டிச் சென்றார்.

    சாமி தரிசனம் செய்து விட்டு புதுவைக்கு திரும்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலை வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.

    இதில் தியாகராஜனுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கம் தெளிந்த பயணிகள் பஸ் மோதிய வேகத்தில் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட பஸ்சில் இருந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×