search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், பயிற்சி மாணவர்களும் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 37 பேரை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிக்கொண்டு 2-வது சுரங்கத்திற்கு பிக்அப் வாகனம் புறப்பட்டது. சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

    அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களான கந்தவேல் (வயது 47), கலியமூர்த்தி (40), பயிற்சி மாணவர் கீர்த்திவாசன் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.எல்.சி.க்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதற்கு வாகனப்பழுது காரணமாக கூறப்படுகிறது. எனவே, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சரி செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர், பூங்கா நகர், கனக்காம்பரம் பூ தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது65). இவரது மகன் கார்த்திகேயன். இவரது மனைவி சுதானா(38). இவர் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலை பச்சையப்பன், மருமகள் சுதானாவை மோட்டார்சைக்கிளில் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார். உழவர் சந்தை அருகே சென்றபோது பின்னால் வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதானா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

    திருவள்ளூர் டவுன் போலீசார் சுதானாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கெங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் தனது மனைவி சுகன்யா (35), மகன்கள் நவநீப் (6), ஜெகதீஷ் (5) மற்றும் உறவினர் மகேஸ்வரி, அவரது தாயார் சீதாலட்சுமி (63) ஆகியோர் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

    அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் பயணம் செய்த கார் சாத்தூர் அருகில் உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சாலையில் வந்தது.

    அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சரவணன் காரை நிறுத்த போராடியும் பலனளிக்கவில்லை. முடிவில் அந்த கார் அருகில் உள்ள ஓடைக்குள் புகுந்து மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் காரை ஓட்டிய சரவணன், உறவினர் மகேஸ்வரி குழந்தைகள் இருவர் என நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானோரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
    • விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் நகரை சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (வயது 25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழகபகுதியான மயிலாடுதுறைக்கு காரில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர்.

    திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர். இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கொடைரோடு:

    சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ஜெகன்நாதன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்களுடன் காரில் மதுரை, திருச்செந்தூருக்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சேலத்துக்கு காரில் புறப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஜெகன்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காருக்குள் சிக்கிக் கொண்ட அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணம் செய்த சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), மற்றொரு கார்த்திக் (31), முருகேசன் (30), கார் டிரைவர் மகேந்திரன் (39) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இரவு நேரத்தில் 4 வழிச்சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்காக லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பொத்தேரியில் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த பலியானவர்களின் உடல்களை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சாலையை கடக்கும் இடத்தில் சிக்னல் அமைக்க வேண்டும், காலை, மாலை நேரத்தில் அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும், மீண்டும் இது போல் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது45), எலக்ட்ரீசியன். இவர், மோட்டார் சைக்கிளில் ஆயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.

    கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

    விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், தாழங்குப்பம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). இவர் போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    எண்ணூர் கடற்கரை சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோகன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி, விஷ்ணு சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரவி வெங்கடம்ப்பள்ளி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மோகன் ரெட்டி (வயது 27).

    இவர் அதே பகுதியில் உள்ள அசோக் பில்லர் என்ற இடத்தில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வந்தார். மோகன் ரெட்டி நேற்று முன்தினம் புதியதாக கார் ஒன்றை வாங்கினார்.

    அவரது நண்பர்களான ரமேஷ் ரெட்டி (28), விஷ்ணு சவுத்ரி (25), மதுசூதனன் ரெட்டி (25), சீனிவாச ரெட்டி (24) ஆகியோர் புதிய கார் வாங்கியதற்கு மது விருந்து வைக்கும்படி கேட்டனர்.

    நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 5 பேரும் காரை எடுத்துக்கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்குச் சென்றனர்.

    அங்கு இரவு முழுவதும் மது குடித்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    காரை மோகன் ரெட்டி ஓட்டினார். மது போதையில் இருந்த மோகன் ரெட்டி காரை அதிகவேகத்தில் ஓட்டி வந்தார்.

    ரவி வெங்கடம்பள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

    காரில் இருந்த மதுசூதன் ரெட்டி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த வீட்டின் குளியலறைக்குள் விழுந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெடிகுண்டு வெடித்து விட்டதாக எண்ணி விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர்.

    விபத்தை கண்ட அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மோகன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி, விஷ்ணு சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மதுசூதன் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தாடி பத்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மதுசூதன் ரெட்டி இறந்தார்.

    சீனிவாச ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் கவுதம் (22). இவர் தரமணியில் 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதினார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர்.
    • மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மணிகண்டம் தீரன் நகரை சேர்ந்தவர் அகிலன் (வயது 20) . இவர் திருச்சியில் உள்ள ஒரு இனஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19) இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அரிஸ்டோ பாலம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. இதனை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (45) பார்த்தார்.

    உடனே தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை எடுத்தார். அதற்குள் அந்த வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்து விட்டனர்.

    இந்த கண்ணிமைக்கும் நேரத்தில் மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை காவலர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×