என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்டிஓ விசாரணை"
- மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர்
- ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலயத்தின் முன் பகுதியில், பங்கு பேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர். இரு தரப்பி னரையும் போலீசார் சமாதா னம் செய்தனர். ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார்.
போரூர்:
சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரண்யா (வயது27).
இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவேக் மனைவி சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரண்யாவுக்கு அவரது உறவினரான விவேக்குடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மேலும் விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சரண்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த 3-ந்தேதி வட்டக்கானல் பகுதியில் மோனிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
- இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மோனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரில் தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே முறையாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த பீட்டர் சந்திரன் மகள் மோனிஷா (23). இவர் எம்.காம் பட்டதாரி, இவரும் வட்டக்கானல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
மோனிஷா முதுகலை பட்டம் படித்து உள்ளார். ஆரோக்கியசாமி இளங்கலை பட்டம் படித்து உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே ஈகோ பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வட்டக்கானல் பகுதியில் மோனிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மோனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரில் தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே முறையாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் வரதட்சணை பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ முருகேசன் விசாரணை செய்தார்.
இந்நிலையில் தாங்கள் அளித்த மனுமீது உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி மோனிசாவின் உறவினர்கள் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இளம்பெண்ணின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரம் நாயுடுபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்