search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரவை கூட்டம்"

    • கிராம பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம பூசாரிகளின் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய அமைப்பாளர் அரிமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைக்க வில்லை எனவும், நலவாரிய உதவிகள் கிடைக்க வில்லையெனவும் பூசாரிகள் முறையிட்டனர். மேலும் கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலவாரியம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிராமப்புற பூசாரிகளுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

    • வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் அறிவுறுத்த லின் படி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடை பெற்றது. செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    கூட்டத்தில் விக்கிர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மற்றும் ஜென ரேட்டர் வசதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஏ.சி., சுகாதார ஆய்வாளருக்கு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு கணினி வழங்குதல் மற்றும் செல்லம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், நாட்டாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பேருந்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள், செல்லம்பட்டி, நாட்டாபட்டி, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் மருத்து வமில்லா மேற்பார்வை யாளர், கோவிலாங்குளம், முதலைக்குளம் ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், பாண்டி, வாய்ஸ் டிரஸ்ட் தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
    • அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் பேசினர்.

    ஓசூர்,

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஓசூர் வட்டக் கிளை பேரவை கூட்டம், தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.

    இதில் இணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். வட்ட செயலாளர் திம்மராஜ், செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் அருண்குமார் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர்.

    மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர்.

    சங்கத்தின் முன்னாள் மாநில தனிக்கையாளர் நடராஜன், "அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் பேசினர்.

    இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • மருந்துத்து றையின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார பேரவை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • குடும்பநலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்து றையின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார பேரவை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கி துணையுடன் சுகாதார பேரவை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் 30.12.2021 அன்று முதல் சுகாதார பேவை கூட்டம் நடைபெற்றது. அதில் 176 கோரிக்கைகள் முன்மொழியப்பட்டதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் (TAEI) உள்ளிட்ட 26 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை சார்பில், உயர் சிறப்பு சிகிச்சை மையம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் அவர்களால் பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டது.

    வட்டார அளவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை துணை இயக்குநர் சுகாதார பணிகள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களுடன் கூட்ட த்தில் விவாதிக்கப்பட்டது.

    இறுதியாக பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வ லர்கள் மற்றும் பொது மக்கள் உடன் கலந்துரை யாடப்பட்டது.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதார மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் செளண்டம்மாள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தருமபுரி மருத்துவக்கல்லூரி இணை இயக்குநர் (புற்றுநோய், பொதுசுகாதாரம்) சம்பத், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒகேனக்கல், 

    தருமபுரி மாவடடம் ஒகேனக்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மசாஜ் தொழிலாளர்களை சுகாதார தொழிலாளர்களாக மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை உதவித் தொகையுடன் கூடிய இலவச கல்வி வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், கொரோனா கால நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ.7500 வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க மாதேஷ், முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் நஞ்சப்பன், மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் கலை செல்வம், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர் பெருமன்ற கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • 29 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தருமபுரி,

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் மாநில துணை செயலாளர் ச.பூர்ணிமாநந்தினி மாணவர் பெருமன்ற கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தருமபுரி மாவட்ட செயலாளர்கலைச்செல்வம் பேரவை கூட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

    கூட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் இலவச தரமான கல்வியை கிடைத்திட உறுதி செய்ய வேண்டும்.மதவெறிக்கு இடமில்லாத கல்வி வளாகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.பாடதிட்டத்தில் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை புகுத்த கூடாது. வணிகமய கல்வியை ஒழிக்க வேண்டும்.

    வகுப்புவாத வேலை முறையை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாஷ்,மாவட்ட செயலாளர் கெளதம், மாவட்ட துணை செயலாளர்கள் விமல்குமார், ஜீவா,மாவட்ட பொருளாளராக சசிகுமார் மற்றும் 29 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.

    • கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
    • காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர், நவ.24-

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.

    மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் ‌‌.

    இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • கூட்டுறவு பொது பேரவை கூட்டம் தருமபுரி குண்டலப்பட்டியில் நடைபெற்றது.
    • 2021–-2022-ம் ஆண்டு வங்கி நிகர லாபமாக ரூ.14 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரம் ஈட்டிஉள்ளது என்று வங்கி தலைவர் தெரிவித்தார்.

    தருமபுரி,

    மத்திய வங்கியின் 56-வது கூட்டம் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பொது பேரவை கூட்டம் தருமபுரி குண்டலப்பட்டியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றினார்.

    துணைத் தலைவர் எம். கே.வேலுமணி, மாவட்டகூட்டுறவு ஒன்றிய தலைவர் எம்.பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வங்கியின் மேலாண்மை இயக்குனரும், கூட்டுறவு இணைப்பதிவாளருமான எம்.சந்தானம் வரவேற்றார்.

    கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2021–-2022-ம் ஆண்டு வங்கி நிகர லாபமாக ரூ.14 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரம் ஈட்டிஉள்ளது என்று வங்கி தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் வங்கியின் முதன்மை வருவாய் அலுவலரும், கூட்டுறவு துணைப் பதிவாளருமான கே.டி.சரவணன், தருமபுரி சரக கூட்டுறவு துணை பதிவாளர் டி.எஸ்.மணிகண்டன், கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் ஏ.செல்வம், வங்கி பொது மேலாளர் ஜி.அமுதா மற்றும் வங்கி இயக்குனர்கள், அலுவலர்கள், உறுப்பி னர்கள், பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வங்கி உதவி பொது மேலாளர் எல்.ரவி. நன்றி கூறினார்.

    • அலங்காநல்லூரில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொன் பார்த்திபன், விஜய் ஆனந்த், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா, தானம் அறக்கட்டளை கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது
    • பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்தை உருவாக்க வலியுறுத்தல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணை செயலாளர் சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்தை உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை தொடங்க வேண்டும்.

    கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். கை.களத்தூர் பஸ் நிறுத்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கை.களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11, 12, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்.
    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொது செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கண்ணன் பங்கேற்றார்.

    இதில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் குறைந்தபட்சம் ஓய்வூதியம் திட்டத்தை தமிழக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினர்.

    ஓய்வூ பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் ஆரணி, வந்தவாசி, செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×