search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடித்து விபத்து"

    • நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தீபாவளி அன்று அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நடந்துள்ளது.

    தீபாவளி அன்று மக்கள் இரவில் சாலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்தனர். அப்போது, 35 வயதான சோஹம் படேல் என்பவர் சாலையின் நடுவில் பட்டாசுகளை வைத்து கொளுத்த முயன்றார்.

    அப்போது திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், அந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதன் வீடியோ வெளியாகியுள்ளது. பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண இந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடிபகுதியில் கடந்த 25-ந் தேதி பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணாபாடியை சேர்ந்த கோபி (வயது 46) மற்றும் அவரது மனைவி தீபா (40) ஆகியோர் தீக்காயம் அடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு தொடர்பாக ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    • தீப்பொறி பார்சலில் விழுந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மகன் சக்கரவர்த்தி (40) என்பவருடன் நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபி (46) என்பவரை தனபால் அழைத்ததாக கூறப்படுகிறது. கோபி மற்றும் கோபியின் மனைவி தீபா (40) ஆகிய இருவரும் கடைக்கு வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) சங்கு சக்கர பட்டாசை வெடித்துள்ளான். அந்தப்பட்டாசு தவறி, கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு பார்சலில் விழுந்தது.

    இதில் பட்டாசு பார்சல் வெடித்ததில் கோபி அவரது மனைவி தீபா படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா சுப்புராய தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் கீழ் புதுப்பேட்டையில் 15 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் தரணி (48). குமாரின் பட்டாசு கடையில் தரணி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து தெருவில் நடைபெறும் திருவிழாவிற்காக கடையில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து தரணியின் மாடி வீட்டில் வைத்திருந்தார்.

    இன்று காலை மாடியில் பட்டாசு வைத்திருப்பதை பார்த்த தரணியின் மகன் நிர்மல் (20) பட்டாசுகளை ஏன் மாடியில் வைத்துள்ளார்கள் என தந்தையிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நிர்மல் மாடியில் இருந்த பட்டாசுக்கு தீ வைத்தார். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நிர்மலுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் மாடியில் சுற்றுச்சுவர் இடிந்த்து விழுந்தது. பட்டாசு வெடிக்கும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகர மன்ற தலைவர் ஹரிணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    • பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறிகள் தருவைகுளத்தைச் சேர்ந்த சிங்கார செல்வம் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.
    • இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் மீதும் தீ பரவியது. இதில் அந்த வீடுகள் சேதம் அடைந்தன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தார்கள். இதையொட்டி அந்தப்பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

    அப்போது திடீரென பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறிகள் தருவைகுளத்தைச் சேர்ந்த சிங்கார செல்வம் ( வயது 58) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் மீதும் தீ பரவியது. இதில் அந்த வீடுகள் சேதம் அடைந்தன.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×