search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ-மாணவிகளுக்கு"

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு
    • ஒரு சில வீடுகளில் குப்பைகள் தரம் பிரிக்காமல் வழங்கி வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    நாகர்கோவில் கவிமணி பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது வீடுகளில் உள்ள குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து வீடுகளிலிருந்து குப்பைகள் பெறப்பட்டு வருகிறது.ஆனால் ஒரு சில வீடுகளில் குப்பைகள் தரம் பிரிக்காமல் வழங்கி வருகிறார்கள்.தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகளில் துர்நாற்றம் வீசக் கூடிய அளவில் உள்ளது.

    அந்த குப்பைகளை பெண்கள் தொழிலாளர்கள் தான் தரம் பிரித்து வருகிறார்கள்.எனவே வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மாணவ மாணவிகள் இது குறித்து தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறவேண்டும். வீடுகளில் இரண்டு பாக்கெட்கள் வைத்து ஒரு பாக்கெட்டில் மக்கும் குப்பை மற்றொரு பாக்கெட்டில் மக்காத குப்பை போட வேண்டும்.நீங்களே குப்பைகளை தரம்பிரித்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இது குறித்து நீங்கள் பெற்றோர்களிடம் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக்கூற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதன் நோக்கம் குறித்து அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரி விஜய சந்திரன்,சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசுபள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×