search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வில் தோல்வி"

    • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
    • 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மகள் ஷாலினி (வயது 20). இவர் வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.

    அதில் 2 பாடப்பிரிவில் தேர்ச்சியும் 6 பாடப்பிரிவில் தோல்வியும் அடைந்துள்ளார். அதனால் மன உளைச்சலில் கல்லூரிக்கு வரும்பொழுது கல்லூரியின் அருகில் 4 அரளிக்காயினை சாப்பிட்டுள்ளார். பின்பு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் அழைத்து வந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள். ஆத்தூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவியர் இடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயமானார்கள்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் குட்டைகார தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 35). இவரது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பூமாது மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் 12 -ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் உறவினர் 12- ம் வகுப்பு மாணவி 2 பேரும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×