search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மேலும் கொலு சாவடியில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். அதன்படி 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிஷாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலை விழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து வழிபடுவதை பின்பற்றி வருகின்றனர்.
    • மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    அம்மன் அவதாரங்களை வழிபடும் நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் மற்றும் தமிழகத்தில், நவராத்திரியின் 9வது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும் கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி பூஜை குதூகலமாக கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து தினமும் ஒரு பதார்த்தம் படைத்து, பஜனையுடன் வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய கொலு பொம்மைகள் வாங்கி, வீட்டில் கொலு வைக்கின்றனர்.பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு சர்வோதய சங்கம் சார்பில் மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதய சங்க ேஷாரூமில், கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது.விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் சுவாமி சிலைகள், இந்துக்களின் பண்டிகைகளை விவரிக்கும் குரூப் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொம்மைகள், குழந்தை கிருஷ்ணர் பொம்மை, திருமணம், வளைகாப்பு, காதணி விழா நிகழ்வு பொம்மைகள், காமதேனு, சிவன் - நந்தி, குழந்தைகள், குழந்தை விநாயகர் என பல்வேறு வகையான பொம்மைகளும் அணிவகுத்துள்ளன.

    சர்வோதய சங்க நிர்வாகிகள் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய சிலைகள், 25 ரூபாய் முதல் 7,700 ரூபாய் மதிப்புள்ள பெரிய சிலைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்திரி விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழவும், கொலு வைக்கவும் தரமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மேலும் கொலு சாவடியில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். அதன்படி 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிஷாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலை விழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது.
    • 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை ஆகியவை நடக்கிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு கொலுச்சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்புவோர், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு வருகிற 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிசாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

    • நவரத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டும், நவரத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், செப்டம்பர் 30-ம்தேதி லட்சுமி பூஜை, அக்டோபர் 5-ந்தேதி அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

    9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திரளான பக்தர்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் அனைத்து சேவைகளையும், ஆர்ஜித சிறப்பு தரிசனங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

    நவராத்திரி நெருங்குவதையொட்டி பத்மாவதி தாயாருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா தம்பதியினர் 85 கிராம் எடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க பாதங்களை நேற்று காணிக்கையாக வழங்கினர்.

    • 1-ம் திருவிழாவான 26-ந்தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது
    • 9-ம் திருவிழாவான 4-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் அக்டோபர் (5-ந்தேதி) வரை ௧௦ நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான 26-ந்தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும் காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11- 30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் இரவில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 1-ம் திருவிழாவான 26-ந்தேதி முதல் 3-ம் திருவிழாவான 28-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும் 4-ம் திருவிழாவான 29-ந்தேதி முதல் 6-ம் திருவிழாவான 1 -ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    7- ம் திருவிழாவான 2-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்திலும் 8-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 4-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான5-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • இந்தாண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்குகிறது.
    • நவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் சாமிகள் குமரி மாவட்டத்துக்கு புறப்படுகிறது.

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது, இந்த விழாவில் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமிகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

    18-ம் நூற்றாண்டில் இருந்து திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அங்கு நடக்கும் நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகியவை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்தாண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது, இதில் கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன், தொல்லியல்துறை மந்திரி அகம்மது மற்றும் அதிகாரிகள், தமிழக தேவசம்போர்டு சார்பில் மராமத்து என்ஜினீயர் ராஜகுமார், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் மேலாளர் சுதர்சன குமார், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் மேலாளர் மோகனகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் வழக்கமாக நடக்கும் ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி முன்பு நடைபெற்றது போல் சாமிகளின் ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் 22-ந்தேதி புறப்பட்டு பத்மநாபபுரத்தை அடைகிறது. அங்கிருந்து 23-ந்தேதி காலை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகியசாமிகள் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெறுகிறது.

    அன்று இரவு குழித்துறை மகாதேவர் ஆலயத்திலும், 24-ந்தேதி நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலிலும் இரவு தங்கி விட்டு, 25-ந்தேதி இரவு திருவனந்தபுரம் சென்றடைகிறது, கோட்டைக்ககமுள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் சரஸ்வதி அம்மனும், ஆரியசாலை சிவன் கோவிலில் முருகனும், செந்திட்டை அம்மன் கோவிலில் முன்னுதித்த நங்கை அம்மனும் வைக்கப்படுகிறது. 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் சாமிகள் 7-ந்தேதி அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு புறப்படுகிறது.

    • அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
    • வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

    இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
    • ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவராஹி எனப்படும் அம்மன்.

    படைகளுக்குத் தலைவியான அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு வராஹியே தேவதை ஆவாள்.

    ஆனி மாதம் சுக்லபட்சம் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள (பத்து) 9 நாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதியான 4.7.2022 (திங்கட்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வராஹியை அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, மந்திரம் செய்து பாராயணம், ஹோமம் நடத்தி வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த வாக்குசக்தி கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் மற்றும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதனால்தான் வராஹிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்திரத்தால் உணர்ச்சி வசப்பட்டு யாரையும் திட்டவோ, சபிக்கவோ கூடாது. ஏனென்றால் அது உடனே பலித்து பலனைத் தந்து விடும். பிறகு வருத்தப்பட நேரிடலாம். வராஹி வழிபாட்டுக்கு மட்டும் இந்த சிறப்பு உண்டு.

    வராஹி நவராத்திரியின் 9 நாட்களும் ஸ்ரீ மகாவராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி வழிபடலாம். அப்போது பஞ்சம்யை நம, தண்டநாதாயை நம, சங்கேதாயை நம, சமயேஸ்வர்யை நம, சமய சங்கேதாயை நம, வராஹியை நம, போத்ரிண்யை நம, ஸ்ரீவாயை நம, வார்த்தாள்யை நம, மகாசேனாயை நம, ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம, அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் வராஹியை சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு முதலில் சொல்லிய வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி 9 நாட்களும் பூஜை செய்பவர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தினமும் ஒரு அலங்காரம்

    தஞ்சாவூா் பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூா் பெரியகோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடா்ந்து வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29-ம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30-ம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1-ம் தேதி சந்தன அலங்காரமும், 2-ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3-ம் தேதி மாதுளை அலங்காரமும், 4-ம் தேதி நவதானிய அலங்காரமும், 5-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6-ம் தேதி கனி அலங்காரமும், 7-ம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெற உள்ளன.

    நிறைவு நாளான 8-ம்தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

    • ஆஷாட நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.
    • வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி.

    ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வாராஹி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.

    வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.

    வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.

    வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வாராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.

    வாராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    `சதுரங்க சேனா நாயிகா' என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். `வாராஹிகாரனிடம் வாதாடாதே' என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

    வாராஹியை பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம்.

    1. பஞ்சமி,

    2. தண்டநாதா,

    3. சங்கேதா,

    4. சமயேஸ்வரி,

    5 சமய சங்கேதா,

    6. வாராஹி,

    7. போத்ரினி,

    8. சிவா,

    9. வார்த்தாளி,

    10. மகா சேனா,

    11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,

    12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.

    இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீவாராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வாராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி நாளில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வாராஹி தேவியை வழிபடுவோம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம்.

    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கணபதி அபிஷேகம், வராகி அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் வராகி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×