search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்வளர்ப்பு"

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை சார்பில், 'தற்போதைய சூழலில் மீன்வளர்ப்பு மற்றும் மீன் வகைப்பாட்டியல்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுகலை விலங்கியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் 'புரோ பயாட்டிக்கஸ் இன் அக்குவாகல்சர்' என்ற தலைப்பிலும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கண்ணன் 'கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் தன்மை மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் பங்கேற்பாளர்களுக்கு மீன் வகைப்பாட்டியல், மீன் வகைகளை கண்டறிதல், செதில்களின் வகைப்பாடு, நண்டு வகைகளை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவர்கள் சுந்தரவடிவேல், கதிரேசன், பாலகிருஷ்ணன், கவிதா, கோகிலா, பேராசிரியர்கள் வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து, சிவமுருகன், அபுல்கலாம் ஆசாத், அந்தோணிமுத்து பிரபு, ஆல்வின், லிங்கதுரை, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை முதுகலை விலங்கியல் துறை பேராசிரியர் லோக்கிருபாகர், கொளஞ்சிநாதன், ஆய்வக உதவியாளர் அன்புசெல்வன் மற்றும் முதுகலை விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர். பேராசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.

    • விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க வேளாண்துறை மற்றும் இதர துறைகள் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
    • உள்நாட்டு மீன் ரகங்களை வளர்ப்பதால், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக கிணறு மற்றும் போர்வெல் அமைத்து, காய்கறி பயிர் மற்றும் நீண்ட கால பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க வேளாண்துறை மற்றும் இதர துறைகள் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக பண்ணைக்குட்டை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பண்ணைக்குட்டைகளில் மழை நீரை சேகரிப்பதுடன் கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை இருப்பு செய்து பயிர்களுக்கு பாய்ச்சும் முறையையும் விவசாயிகள் பின்பற்றுகின்றனர். எனவே ஆண்டு முழுவதும் இந்த பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பெரும்பாலான விளைநிலங்களில், பண்ணைக்குட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குட்டைகளில் மீன் வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும். குறிப்பாக உள்நாட்டு மீன் ரகங்களை வளர்ப்பதால், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாயும் கிடைக்கும். எனவே மீன் வளர்ச்சி கழகம் வாயிலாக பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்புக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றனர்.  

    • ஜேடர்பாளையத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து மீனவர்களுக்கு விளக்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஜேடர்பாளையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நடைபெற்றது. பயிற்சியை நாமக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாச்சிமுத்து தொடங்கிவைத்தார்.

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி முன்னிலை வகித்து வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

    சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து விளக்கினார்.

    சிறுநல்லிகோயில் கிராமத்தில் மீன்பண்ணை அமைத்து மீன்சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜு மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, கட்லா, ரோகு. மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை மற்றும் மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா ஆகிய பல்வேறு ரக மீன்களை ஒருங்கிணைத்த முறையில் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு விளக்கவுரை அளித்தார்.

    மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஹேமலதா, கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் பேசினர். பயிற்சியின் முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், முன்னோடி விவசாயிகள் மாரியம்மன் படுகை பழனிசாமி, உழவன் விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், ரமேஷ்குமார் மற்றும் வடகரை ஆத்தூர் கிராம முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

    • சிறுநல்லிக்கோவில் கிராமத்தில் திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.
    • மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம் சிறுநல்லிகோயில் கிராமத்தில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நடைபெற்றது. பயிற்சியை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கிவைத்து வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

    சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி கலந்து கொண்டு மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள், பண்ணைக்குட்டைகளில் அவைகளை வளர்க்கும் தொழில்நுட்பங்கள், திலேப்பியா மீன்களின் துரித உடல் எடை வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய தீவன மேலாண்மை மற்றும் விற்பனை வழிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகி நலவாரிய அட்டை பெற்றிருக்கும் மீன் வளர்க்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை குறித்தும் விளக்கினார்.

    சிறுநல்லிகோயில் கிராமத்தில் மீன்பண்ணை அமைத்து மீன்சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜு மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு விளக்கவுரை அளித்தார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், உழவர் ஆர்வலர் குழு நிர்வாகி சரவணன், உழவர் நண்பர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×