என் மலர்
நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"
- 6 மாதங்களை கடந்தும் இன்று வரை டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.
- ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
சிங்காநல்லூர்,
கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இது பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.
மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவாங்கி கொண்டு இங்கு வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
- 4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ மருந்துத்துறையின் சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.
தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த 2 புதிய கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் காங்கயம் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் 50 கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது :- வட்டார மருத்துவமனையாக இருந்த காங்கயம் மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கு தேவையான புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தந்துள்ளார். இதற்கான கட்டிட பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டிட பணிகள் முடிந்து திறந்து வைக்கப்படும்.தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள் முடிந்து, விரைவில் திறந்து வைக்கப்படும்.மேலும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
- பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் ஊராட்சியில் தாயம் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. இதன் திறப்பு விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தாயம் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.எஸ்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகு பிரசாந்த் மற்றும் பெருந்தொழுவு ரவி,அர்ச்சுணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், டாக்டர். சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்த சாமி மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் திருச்செங்கோட்டில் அரசு ஆஸ்பத்திரி சிடி ஸ்கேன், சீதாராம் பாளையம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் உட்பட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இன்று காலை கொல்லிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி கொல்லிமலை சென்று, இன்று காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, கொல்லி மலை வட்டம், சோளக்காடு-புதுவளவு நலவாழ்வு மையம் மற்றும் இலக்கியம்பட்டி நலவாழ்வு மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
- தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
திருவண்ணாமலை:
108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆண் குழந்தை பிறந்தது. திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர்.
நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வழியே சென்று கொண் டிருந்தபோது தீபாவிற்கு பிரசவவலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் தினகரனுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
- 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.
- பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
- டாக்டர் நபீஷாபானு முன்னிலையில் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் தேசி யதர சான்றிதழ் வழங்குவதற் கான ஆய்வு நடைபெற்றது.
பிரான்மலையில் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கர்ப் பிணி பெண்கள் உள்பட 250-க்கு மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
இந்த பகுதி கிராம மக்களின் நம்பிக்கை யை பெற்ற பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தில் வாரத் தில் 2 நாட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தர மான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் மேலும் பல்வேறு சிகிச் சைகள் அளித்திட மேலும் வசதிகள் கிடைப்பதற்காக தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வினை தேசிய தரச் சான்று ஆய்வு குழு நிபுணர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்ட னர்.
தேசிய தரச்சான்று ஆய்வுக்குழு நிபுணர்கள் டாக்டர் மணிஸ் மதன்லால் சர்மா, டாக்டர் பிரசாந்த், சூரிய வள்ளி ஆகியோர் ஆய்வினை மேற்கொண்ட னர். துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் விஜய் சந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபீஷாபானு முன் னிலையில் நடைபெற்றது.
- அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
- மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதாக புகார்
செய்யாறு:
செய்யாறு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் முரளி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
விவசாயத்திற்கு காலை சிப்ட்டில் 6 மணிக்கு மின்சார வழங்க வேண்டும். ஏனாதவாடி சுற்றி சுமார் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் பெருங்கட்டூர் அல்லது தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்குத்தான் செல்ல வேண்டும்.
பஸ் வசதி இல்லாத காரணத்தால், 2 பஸ்கள் மாறுதலாகி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கிராம மக்களின் சுகாதார வசதிக்காக ஏனாதவாடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். செய்யாறில் ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்கம் மைய கட்டிடம் கட்ட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழை கேட்டு சப்- கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்தால், ஒரு வருடம் ஆனாலும் கிடைப்ப தில்லை. விரைவாக சான்றிதழ் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
அதேபோல் பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதை தடுத்து உடனடியாக பட்டா கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
- குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடந்தது
திருவட்டார் :
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பேசில்துரை, மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், துணை தலைவர் டாக்டர் அஜித் ஜித், துணை அமைப்பாளர் டாக்டர் மார்பல்சிங், தொகுதி துணை அமைப்பாளர்கள் டாக்டர் பெலக்கில்ராஜ், சேம்ராஜ், கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.