search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோபைடன்"

    • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
    • நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.

    அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.

    • வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார்.
    • நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:-

    பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம், கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார். நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார். பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன்.

    நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீரா தாண்டன் தற்போது அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் உள்ளார்.

    • போரை முடிவுக்கு கொண்டு வர புதினை சந்திக்க தயார் என ஜோ பைடன் தகவல்.
    • அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க முடிவு.

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மேக்ரனை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை. அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    'பின்னர் பேசிய மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது.

    மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.

    இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது. அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 

    • அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது.
    • ஜி-20 மாநாட்டில் அதிபர் ஜோபைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார்.

    வாஷிங்டன்:

    ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலியில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டின் போது ஜோபைடன்-ஜின்பிங் சந்தித்து பேச இருப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லியன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது, இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ஜேக் சுல்லியன் பதில் அளித்து கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதனால் ஜி-20 மாநாட்டில் அதிபர் ஜோபைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார்.

    ஜோபைடன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி பல முறை வந்துள்ளார். அவர்கள் பல்வேறு முறை நேரடியாக சந்தித்தோ, தொலைபேசி மற்றும் வீடியோ மூலமாகவோ பேசி உள்ளனர்.

    பல்வேறு நெருக்கடியான விஷயங்களில் இருவருக்கும் இடையே சரியான மற்றும் பலனளிக்க கூடிய நட்புறவு இருந்து வருகிறது.

    இந்தியா-அமெரிக்கா நல்லுறவை வலுப்படுத்த இருவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் ஜோபைடன் ஆவலுடன் உள்ளார். அடுத்த ஆண்டும் மோடியை ஜோபைடன் சந்தித்து பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
    • இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

    இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார். 


    இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.

    • சீனாவின் நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷியாவுடனான நெருக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
    • நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷியா போரிட்டு வரும் சூழலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும், அளித்து வரும் உதவிகள் அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் ரஷியாவின் அச்சுறுத்தலையடுத்து ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்கை ஜோபைடன் சந்தித்து பேசினார்.

    நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்க போகிறோம். போலந்தில் நிரந்தர ராணுவ தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப் படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்கா நேட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீனாவுக்கு நேட்டோ மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷியாவுடனான நெருக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருக்கிறது. நேட்டோ நாடுகள் பாதுகாப்புக்கும், மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேட்டோவில் உறுப்பினர்களாக சுவீடன், பின்லாந்து நாடுகள் இைணந்ததற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ×