search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கைது"

    • அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
    • கேமரா காட்சிகளை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த காய்கறி வியாபாரி பொன்ராஜ். கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தூத்துக்குடியை சேர்ந்த இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருந்து வந்த முன் பகையால் சென்னையில் வசித்து வந்த தம்பி மகனான அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பொன்ராஜை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அற்புதராஜூடன் சென்று பொன்ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி வாண்டுமணி மற்றும் கூட்டாளியான சுப்ரமணி என்பது தெரியவந்தது.

    இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாண்டு மணி, சுப்ரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அற்புதராஜின் மைத்துனர் நடத்தி வரும் 'பாஸ்ட் புட்' உணவகத்துக்கு ரவுடி வாண்டு மணி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் அற்புதராஜ், வாண்டு மணியையும் அவரது கூட்டாளி சுப்ரமணியையும் துணைக்கு அழைத்து சென்று பொன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    • ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
    • வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.

    வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
    • சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26). இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    • பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன் (வயது27), அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (19) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி தருவைக்குளம் சென்றனர். அங்கு முருகன் அந்தப்பெண்ணை கற்பழித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்ட கோகுல்ராம் அவரை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை மிரட்டி முருகன் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரிடமிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற முருகன் தவறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோகுல்ராமும் கைது செய்யப்பட்டார்.

    கைதான முருகன் என்ற கட்டை முருகன் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 16 வழக்குகளும், சிப்காட் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என 18 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    • வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    புதுச்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத்சங்கர் (வயது46). சித்த மருத்துவ தொழில் செய்து வரும் இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் என்பவர் வினோத் சங்கருக்கு பழக்கமானார். அப்போது வினோதன் தன்னிடம் சக்திவாய்ந்த பச்சைநிற மூலிகை கல் இருப்பதாக வினோத்சங்கரிடம் கூறினார். இதனை நம்பி அந்த மூலிகை கல்லை ஏராளமாக பணம் கொடுத்து வினோத் சங்கர் வாங்கினார்.

    ஆனால், போலி மூலிகை கல் என தெரியவந்ததும் அந்த கல்லை வினோத்சங்கர் திருப்பி கொடுத்து விட்டார்.

    இதனையடுத்து வினோதன் மீண்டும் தனக்கு தெரிந்த நபரிடம் சக்தி வாய்ந்த கலசம் இருப்பதாக வினோத்சங்கரிடம் தெரிவித்தார். இதையடுத்து அதனை வாங்க வினோத்சங்கர் தனது அறக்கட்டளையில் பணிபுரியும் 4 பேருடன் புதுவைக்கு காரில் வந்தார். மரப்பாலம் சந்திப்பில் வந்தபோது வினோதன் உள்பட 9 பேர் காரை நிறுத்தினர்.

    பின்னர் கத்தியை காட்டி வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் கடத்தி சென்று தாக்கி அவர்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    மேலும் வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாது வினோத்சங்கரின் அறக்கட்டளை நிர்வாகி முத்துக்குமாருக்கு போன் செய்து ரூ.4 லட்சத்தை கொடுத்தால் வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.

    இதையடுத்து முத்துகுமார் திருக்கோவிலூரில் வைத்து ரூ.4 லட்சத்தை வினோதன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்து வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் மீட்டு சென்றார்.

    இதுகுறித்து வினோத்சங்கர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோதன், வேல்ராம்பட்டை சேர்ந்த கல்விசெல்வம், முகமது பரூக், மகேஷ், பிரபு, அதிகைவாணன் ஆகிய 6 பேர் உடனடியாக கைது செய்தனர்.

    அதன்பிறகு அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த அறிவு என்ற அறிவழகன் (28), வேல்ராம்பட்டு விமல் (23) மற்றும் கொம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்ற ஜெயசந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுவை ரோடியர்பேட் கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ரோல் அந்தோணி (35) என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம், ஜம்பராபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் பந்தல்குடி ராஜேஷ் (வயது 30). இவர் மீது தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பந்தல்குடி ராஜேஷ், தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலை கடந்த ஆண்டு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் "என் கை, கால்களை உடைக்க வேண்டும் என்று சொல்லி திரிகிறாயாமே? ஆம்பளையா இருந்தா காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா, நாம் ஒத்தைக்கு ஒத்தையாக சண்டை போட்டு பார்க்கலாம். நீ எங்கே இருக்கேனு சொல். நான் வருகிறேன்" என்று மிரட்டினார்.

    பந்தல்குடி ராஜேஷ்-போலீஸ் ஏட்டு செந்தில் இடையேயான ஆடியோ உரையாடல், அப்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

    இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பந்தல்குடி ராஜேஷை கைது செய்வதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிகுந்தகண்ணன், சண்முகநாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பந்தல்குடி ராஜேஷை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்தனர். ஆனாலும் அவர் பிடிபடவில்லை.

    இதற்கிடையே பந்தல்குடி ராஜேஷ் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே அவரை கையும் களவுமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் பந்தல்குடி ராஜேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை ஜம்புராபுரம் வீட்டுக்கு வந்து இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. எனவே போலீசார் நேற்று இரவு ஜம்புராபுரம் வீட்டுக்கு சென்றனர். அப்போது பந்தல்குடி ராஜேஷ் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும், பந்தல்குடி ராஜேஷ் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், "எனக்கு நரம்பு நோய் பிரச்சனை உள்ளது. இதற்காக கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அந்த நோய் குணமாக ஓராண்டு காலம் பிடித்தது. அதன் பிறகு நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை திரும்பினேன்.

    இங்கு வந்த பிறகு தான் போலீசார் என்னை தேடுவது தெரிய வந்தது. நான் தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலிடம் மிரட்டலாக பேசியது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சி உள்ளார்.

    பந்தல்குடி ராஜேஷ் மீது கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அவரிடம் இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). ரவுடி. இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தார்.

    பின்னர் தினேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரவுடி தினேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை சூப்பிரண்டிடம் வழங்கினார்.

    ×