என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீரமைக்கும் பணி"
- டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.
மீனம்பாக்கம்:
டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அடுத்த மோள பாளையம் பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மோளபாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலத்திற்கு (26-வது மைல்) கிழக்கே வாய்க்காலின் இடது கரையில் நேற்று இரவு திடீரென மண் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கரையில் மண் சரிவு ஏற்பட்டு மண் கரை சேதமானது.
இது குறித்து தெரிய வந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுப் பணித்துறையினர் விரைந்து மண் கொட்டி சீரமைக்க வேண்டும். மண் அரிப்பை சரி செய்யாவிட்டால் சேதாரம் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த அரிப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்த போது இந்த பகுதியில் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண் அரிப்பு இன்று சரி செய்யப்படும் என கூறினர்.
இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியாளர்கள் மூலம் மண் அரிப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- மாலைமலர் செய்தி எதிரொலி
- கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. பாலவிளை ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள்.
இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. வாக னங்களோ பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்க படாமல் கிடந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் தான் தீ குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
மேலும் பொது மக்கள் சேர்ந்து இந்த சாலை சீரமைக்கப்படா விட்டால் போராட்டம் நடத்த போவதாக அறி வித்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாத வாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர். 2 மாதங்களாக மாற்று பாதைவழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிர மத்துக்கு ஆளாகி வந்தனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பாலவிளை, ஈத்தவிளை சாலையில் இண்டர்லாக் பதிப்பித்து அப்டியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாத வாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாலைமலரில் விரிவாக செய்தி பிரசுர மானது. இதைதொடர்ந்து சாலை பணி தொடங்கப்பட்டு இன்று முதல் வாகனங்கள் செல்வதற்கு சாலை திறக்கப்பட்டது. பொது மக்களும் வாகன ஓட்டிகளும் நிம்மதி யடைந்தனர்.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்துவதற்கு இயலாத நிலை இருந்து வந்தது
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூராட் சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மூத்தார்குளம் உள்ளது. இந்த குளம் பொதுமக்கள் குளிப்பதற்கா கவும் விவசாய பாசனத்துக் காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் மதகின் முகத்துவாரம், பொதுமக்கள் குளிப்ப தற்காக பயன்படுத்தும் படித்துறை மற்றும் மறுகால் செல்லும் பகுதி போன்றவை செடி, கொடிகளால் ஆக்கி ரமிக்கப்பட்டு குளத்தில் தண்ணீர் நிற்பதே வெளி யில் தெரியாத அளவுக்கு புதர்மண்டி கிடந்தது.
இதனால் இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாய பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கும் இயலாத நிலை இருந்து வந்தது. எனவே இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பொதுமக்களின் நலன்கருதி கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவர் விமலா மரியநேசன் தனது சொந்த செலவில் கொட்டாரம் மூத்தார்குளத்தை சீர மைக்கும் பணியை மேற் கொண்டார். இந்த குளத்தை சீர மைக்கும் பணியை அகஸ் தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ் வரம் ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி மரியநேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது.
- துணை மேயர் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் பொதுமக்கள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி பாதாள சாக்கடை மூடி சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணியால் மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாவில் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்ட முத்துப்பட்டியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.4.65 கோடியில் பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மேலூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டி யில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47/100 கி.மீ முதல் நெடுகை தூரம் 58/000 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த பணிகள் நபார்டு நிதியுதவியு டன் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிழக்கு வட்டத்தில் உள்ள மாங்குளம், சின்ன மாங்குளம், கண்ட முத்துபட்டி மீனாட்சிபுரம், தேத்தம்படி ஆகிய 5 கிராமங்களும், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10கிராமங்களும் பயன்பெறும்.
இதன் மூலம் மதுரை கிழக்கு வட்டம் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22,332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அந்த பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னமாங்குளம் பகுதி யில் உள்ள 40குடியிருப்பு களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படு வதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மேற்குறிப்பிட்ட 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கவும், உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது
- தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுர பகுதியில் வீர வசந்தராயர் மண்டபம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் கருகி சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக சிற்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் மண்டபத்தை பாரம்பரிய முறைப்படி புனரமைப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக அரசு 18.10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருந்தது.
இந்த நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த பிரம்மாண்ட கற்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் கிராமத்தில் பத்திரமாக பாதுகாக்கப் பட்டன. அங்கு குவாரி கற்களை, சிற்பத் தூணாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல் சிற்பத் தூண் நிர்மாணிக்கும் பணி, இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீர வசந்தராயர் மண்டபத்தில் ஒட்டு மொத்தமாக 40 தூண்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் படிப்படியாக தொடங்கி நடந்து வருகிறது.
வீர வசந்த ராயர் மண்டப பூமிபூஜையின் போது கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கடல் உப்பு காற்றினால் சிதிலமடைந்த பகுதிகளில் சிமெண்ட் கலவை பூச்சு
- காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்திகலசம் கன்னியா குமரிக்கு எடுத்து வரப்பட்டது.
அந்த அஸ்தி கலசம் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவுமண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கரைக்கப்பட்டது.இதனை நினைவு கூறும் வகையில் காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.
காமராஜர் மணிமண்ட பத்தில் காமராஜரின் மார்பளவு வெண்கலச் சிலை அமைந்து உள்ளது. மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அபூர்வ புகைப்பட கண்காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளி விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காமராஜர் மணிமண்டபம் கடல் உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதிலமடைந்து வெடிப்பு விழுந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு மூலம் ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணியாக மணிமண்டபத்தின் வெளிப்புறப் பகுதியில் மூங்கில் கம்புகளினால் சாரம் அமைக்கப்பட்டு சிதில மடைந்து வெடிப்புவிழுந்து காணப்படும் பகுதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
- ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் கம்பி பாலத்தில் இருந்து ராஜாக்க மங்கலம் வரை உள்ள 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.
இதையடுத்து அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட் டது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியைச் சேர்ந்த ஆர். பி.ஆர். நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு சாலை சீரமைப்பதற்கான டெண்டரை எடுத்தனர்.இதை தொடர்ந்து சாலை பணிகள் மேற்கொள்ளப் பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னி லையில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது.
சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெண்டரில் குறிப்பிட்டவாறு சாலை சீரைமக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நெடுஞ் சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறு கையில், சாலை சீரமைப்ப தற்கான டெண்டர் போடப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கும்பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த பணியை நானும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். டெண்ட ரில் குறிப்பிட்டவாறு தரமாக அந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பில் எந்த குறைபாடும் கிடையாது. கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும் என்றார்.
- 47, 42-வது வார்டு பகுதியில் புனித மிக்கேல் பள்ளி சாலையை ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி
- எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 699 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை மேயர் மகேஷ் வழங்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 47, 42-வது வார்டு பகுதியில் புனித மிக்கேல் பள்ளி சாலையை ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 699 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை மேயர் மகேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் ஜெனிதா, ஸ்டாலின் பிர காஷ், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோனேரிப்பள்ளியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்தில் கோனிரிபள்ளி ஊராட்சியில் மன்ற தலைவர் கோபம்மா சக்கரலப்பா தலைமையில் ரூ10,71,000 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் புனரமைக்கும் பணிக்கு சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- பணிகள் நிறைவடைந்தது.
- 4-ந் தேதி முதல் பஸ், லாரிகளுக்கு அனுமதி
வேலூர்:
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன. அதோடு பாலத்தின் இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்ய ப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடை ந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ள ப்பட்டது.
நேற்று ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.
இதற்காக தலா 30 டன் எடையில் மொத்தம் 120 டன் எடை கொண்ட நான்கு லாரி மேம்பாலத்தின் மீது ஒரே நேரத்தில் இயக்கியும் நிறுத்தியும் பாலத்தின் அதிர்வு தன்மை பளுதாங்கும் தன்மை குறித்து பிரிட்ஜ் டெஸ்டிங் எந்திரம் மூலமாக ெரயில்வே என்ஜினீயர்கள் சோதனை செய்தனர்.
அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் பாலத்தின் மீது தண்ணீர் தேங்காத வகையில் குழாய் புதைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இருசக்கர வாகனங்கள்
இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக கதிர் ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.அதன்படி பாலத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்து மீறி சில ஆட்டோக்களும் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். கனகரக வாகனங்கள் வழக்கம்போல் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 4-ந்தேதி முதல் பஸ் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்