search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலை"

    • ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது.
    • சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தியாரா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அங்கித்குமார்.

    இவரது குடும்பத்தினர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு கங்கா நதிநீர் மூலம் பூஜை செய்வதற்காகவும், கங்கை நதியில் நீராடவும் அவர்கள் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று மாணவர் அங்கித் மீது பாய்ந்து அவரை தாக்கி கடலுக்குள் இழுத்து சென்று கடித்து உயிரோடு சாப்பிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கடற்கரையையொட்டி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மாணவர் அங்கித்தின் உடல் கரை ஒதுங்கியது.

    உடலை பார்த்து அங்கித்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முதலை மீது ஆத்திரம் கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கடலில் சுற்றிய முதலையை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அதனை கம்பு மற்றும் குச்சிகளால் சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் முதலை இறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சம்பவம் குறித்து அங்கித்தின் தாத்தா சகல்தீப்தாஸ் கூறுகையில், நாங்கள் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி அதற்கு பூஜை செய்வதற்காக கங்கை நதிக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது. சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து முதலையையும் வெளியே இழுத்து அடித்து கொன்றோம் என்றார்.

    • இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை ஆகும்.

    அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது.

    16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.

    இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலஎஎம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.

    இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    • சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது
    • இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிதம்பரம் சரக வனவர் பிரபு தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், வனக்காப்பாளர் அமுதபிரியன் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று அதிகாலையில் சிதம்பரம் வட்டம் கவரப்பட்டு கிராமம் அரசு மருத்துவமனை எதிரில் 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வக்கரமாரி நீர் தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

    • மீன் பிடிக்க நீர் இறைத்தபோது வெளியே வந்தது
    • தீயணைப்பு வீரர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் குளத்தில் மீன் பிடிக்க நீர் இறைத்த போது முதலை சிக்கியது.உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மயக்க ஊசி செலுத்தி முதலையை பிடித்து கட்டப்பட்டுள்ளது.இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.கொள்ளிம் ஆற்றில் இருந்து குளத்திற்கு முதலை வந்திருக்கலாம் என அந்த பகுதி நம்புகிறார்கள். 

    • மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.
    • ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.

    இந்த ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான். ஆற்றின் கரையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

    குளித்து கொண்டிருந்த சிறுவன், திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றான். அங்கு நின்றபடி அவன் அலறினான்.

    சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது சிறுவனை ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்று உயிரோடு விழுங்குவதை கண்டனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதலையின் பிடியில் இருந்து சிறுவனை மீட்க முயன்றனர். அதற்குள் முதலை சிறுவனை விழுங்கிவிட்டது.

    இதை கண்ட கிராம மக்கள் முதலையை வலைவீசி பிடித்தனர். பின்னர் அதனை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் முதலையை கிராம மக்கள் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர்.

    ஆனால் கிராம மக்கள் சிறுவனை விழுங்கிய முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான் என கூறினர். மேலும் சிறுவனை விழுங்கிய முதலை அவனை கக்கும் வரை முதலையை விடமாட்டோம் எனவும் கூறினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசப்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவர்களிடம் இருந்து முதலையை மீட்டு சென்றனர்.

    • கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது.
    • திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா.

    இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார். ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது.

    கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.

    திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

    திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறும்போது, "இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளம் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை" என்றார்.

    இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×