search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240523"

    தக்கலை அருகே சோக சம்பவம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோடியூர் காடு வெட்டி பகுதியை சேர்ந்தவர் அனுராஜ் (வயது26), என்ஜினீயர்.

    இவர் கடந்த 23- ம் தேதி தனது நண்பர்களுடன் கிறிஸ்மஸ் குடில் பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது.

    இதில் அனுராஜ் சாலை யில் தவறி விழுந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அனுராஜ் திருவனந்த புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கேட்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனுராஜ் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பலியான அனுராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் பார்த்து முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று (5-ந் தேதி) திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் தான் அனுராஜ் விபத்தில் சிக்கி நேற்று இறந்து விட்டார். இதனை சொல்லி உறவினர்கள் கண்ணீர் வடித்தது அங்கு வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    அனுராஜ் ஏற்கனவே தனது உடலை தானம் பண்ணுவதாக கூறியிருந்த தால், அவரது உடலை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இன்று மாலை இவரது உடல் காடு வெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்ப டுகிறது. விபத்து குறித்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • காரில் சென்ற என்ஜினீயரை கும்பல் பட்டா கத்தியால் தாக்கியது.
    • மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). மஸ்கட் நாட்டில் பொறியாளராக உள்ளார்.

    இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் ஆண்டுக்கு 2 முறை மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை வந்திருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக, செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சர்வேயர் காலனிக்கு வந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் கும்பல் பட்டாக்கத்திகளுடன் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் கூறுகையில், "எனக்கும் சகோதரர் நவநீதகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் உள்ளது. அவர் என்னை ஆள் வைத்து தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செந்தில்குமாருடன் தொடர்பு உடைய சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாரின் மனைவி சிலரிடம் ரகசியமாக பேசி வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்தாண்டம் கீழபம்மம் பகுதியை சேர்ந்தவர் டான் சந்திர சுதன். இவரது மகன் பிரின் அனுக் (வயது27).

    பொறியியல் பட்டதாரியான இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பணிமுடிந்து மாலை வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை கொக்கிடிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். நெடுநேரம் ஆகியும் பிரின் அனுக் மீட்க படாததால் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.

    இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக இவரது தந்தை டான் சந்திர சுதன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
    • நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 26). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    டெல்லி துவாரகா நகர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடு வதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை தீபா வளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்று வதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார்.

    அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை. ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.இதனால் சுஷ்மா கூச்சலிட்டார். அங்கிருந்த சுற்றுலா பயணி கள் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து நாகர் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சீனிவாசன் கனடாவில் வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ேவலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.

    கோவை,

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயர். இவர் கனடாவில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ேவலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.கடந்த சில மாதங்களாக இவர் மிகுந்த மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    சீனிவாசன் கடந்த 22-ந் தேதி கோவைக்கு வந்தார். பின்னர் லட்சுமி மில் சிக்னலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மன அழுத்தத்துடன் அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி வந்தது. இதனையடுத்து கழிவறைக்கு சென்ற சீனிவாசன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சீனிவாசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    அதில் எனக்கு கடுமையான மன உளைச்சல் உள்ளது. நான் தனிமையில் தவிக்கிறேன். என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி லேப்டாப், செல்போன் பறித்த 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    மதுரை

    ஆந்திர மாநிலம், நாராயணபுரத்தைச் சேர்ந்த சிம்மாசலம் மகன் அனவேஸ் (வயது 19). இவர் மதுரை வளர் நகரில் தங்கி தனியார் கணினி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், நண்பர்கள் சாஜித், ஜீவன்குமார் ஆகியோருடன் மதுரை-மேலுார் 4 வழிச் சாலையில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த 10 பேர் கும்பல், அனவேசிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது. அவர் தர மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், அனவேசை தாக்கியது. பின்னர் அந்த கும்பல் அனவேஸ் வைதத்திருந்த லேப்டாப், செல்போனை பறித்து கொண்டு தப்பியது.

    காயமடைந்த அனவேசை நண்பர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை, ஆதிநாராயணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அனவேசை தாக்கிய கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீசார் கருப்பாயூரணி, மேலூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 7 பேர் சிக்கினர்.

    அவர்களை போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களில் 2 பேர் தவிர மீதம் உள்ள 5 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து அனவேசிடம் லேப்டாப், செல்போன் திருடிய மேலூர் தெற்கு தெரு, வைத்தியநாத அய்யர் சந்து பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தகுமார் என்ற மணிப்புறா (24), கருப்பாயூரணி சீமான் நகர், பிள்ளையார் கோவில் தெரு முத்துப்பாண்டி மகன் மாலை வீரன் (21) ஆகியோர் உள்பட 7 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • ஏற்காட்டில் இருந்து 21 கி.மீ.தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
    • அப்போது சக்திவேல் அருவியின் மேற்பகுதியில் பாறையில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அருவில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சக்திவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஏற்காடு:

    திருப்பூர் பூண்டி பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது53). என் ஜினீயரான இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு சுற்ருலா வந்தார். ஏற்காட்டில் அறை எடுத்து தங்கி முக்கிய இடங்களை பார்த்த அவர்கள் இன்று காலை ஏற்காட்டில் இருந்து 21 கி.மீ.தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

    அங்கு சக்திவேலின் குடும்பத்தினர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சக்திவேல் அருவியின் மேற்பகுதியில் பாறையில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அருவில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சக்திவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சக்திவேலுக்கு காந்திமதி(50) என்ற மனைவியும், ஆதித்யா(25), அபிமன்யு(18) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
    • முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் அம்பவாரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் ஐதராபாத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் புதியதாக வீடு கட்ட ரூ.80 லட்சம் தேவைப்படுவதாகவும், உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வர வேண்டும் என இளம்பெண்ணிடம் சதீஷ்குமார் கூறினார். அதற்கு இளம்பெண் தன்னுடைய தாய் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார்.

    பணத்தை வாங்கி வரவில்லை என்றால் படுக்கை அறையில் எடுத்த நிர்வாண போட்டோக்களை ஆபாச வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இளம்பெண் பணம் வாங்கி வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    பெங்களூருக்கு சென்ற சதீஷ்குமார் தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று மனைவியை மீண்டும் மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கணவரின் செல்போனை பிடுங்கி அதில் உள்ள போட்டோக்களை ஆய்வு செய்தபோது மேலும் 4 பெண்களை அவர் திருமணம் செய்த போட்டோக்கள் செல்போனில் இருந்தது.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட இளம்பெண் இதுகுறித்து குண்டூர் டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூர் மீரான், தரங்கினி ஆகியோர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

    இதையடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற சதீஷ் பாபு முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

    மீண்டும் ஆந்திராவிற்கு வந்த சதீஷ்குமார் குண்டூர் நரசராவ் பேட்டை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டு நெல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து மேலும் இதுபோல் வேறு பெண்கள் யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்றார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் புஷ்பராஜ் (வயது 32). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பராஜ் நடுவலூர் நால்ரோடு பகுதியில் இருந்து கார்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். எதிரே கார்குடி காலனி தெருவை சேர்ந்த கண்ணன்(45) என்பவர் சாலையோரத்தில் நடந்து வந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக புஷ்பராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கண்ணன் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதில் புஷ்பராஜ் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரின் காரை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
    • திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த லோகநாதன் (33) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. லோகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர் கூறுகையில், நான் பெங்களூருவில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தேன். மதுபான கடைக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அதன் பிறகு காரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு, அங்கு படுத்து தூங்கினேன். அங்கு வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு காரை கடத்திச் சென்று விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது. போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் தேடிப் பார்த்தனர். அந்த கார், ஒத்தக்கடை நோக்கி செல்வது தெரியவந்தது. போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று காரை மடக்கிப்பிடித்தனர்.

    காரில் இருந்த வாலிபரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று விசாரித்தனர். அவர் ஒத்தக்கடையை சேர்ந்த ரமேஷ்(30), கார் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×