search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியியல் கல்லூரி"

    • மாணவர்கள் சிறந்த நிர்வாகியாக ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும்
    • சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் பேச்சு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மை துறையினரின் "வி- உற்ஸவம் 2K23" நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவி பெர்வின் மனோ வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் டயானா க்றிஸ்டில்ட்டா தொடக்க உரையாற்றினார்.

    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஒரு சிறந்த தலைவனாக விரும்புகிறவர் தம்முடைய ஆளுமை அதிகாரத்தை பயன்படுத்துவதை விட பிற மனங்களை வசீகரித்து செயல்படுபவராக, செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருப்பது அவசியம் என்றார்.

    விழாவில் 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொருட்களை விளம்பரப்படுத்துதல், புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்தல், கருத்து விளக்க காட்சி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பொதுப்பிரிவில் 24,727 பேரும், அரசு ஒதுக்கீட்டில் 3293 பேரும் தற்காலிக ஒதுக்கீட்டு கடிதங்களை பெறுகின்றனர்.
    • கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு இன்று முதல் 31-ந்தேதி வரை வாய்ப்பு கொடுத்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 4 கட்டமாக ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பொதுப்பிரிவுக்கு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

    இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு வழங்குதல், பின்னர் அதனை உறுதி செய்தல், அதனை தொடர்ந்து இடங்கள், கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு ஒதுக்கீட்டு கடிதம் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறையின் கீழ் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது. 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் கல்லூரிகள், இடங்களை உறுதி செய்த பிறகு இன்று தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படுகிறது.

    28 ஆயிரம் மாணவர்கள் அதற்கான கடிதத்தை பெறுகின்றனர். பொதுப்பிரிவில் 24,727 பேரும், அரசு ஒதுக்கீட்டில் 3293 பேரும் தற்காலிக ஒதுக்கீட்டு கடிதங்களை பெறுகின்றனர்.

    இதையடுத்து 4-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது. கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு இன்று முதல் 31-ந்தேதி வரை வாய்ப்பு கொடுத்து உள்ளது. 61 ஆயிரத்து 771 மாணவ-மாணவிகள் இந்த சுற்றில் பங்கேற்கிறார்கள்.

    இந்த சுற்று நவம்பர் 13-ந்தேதியுடன் நிறைவடைகிறது. நடந்து முடிந்த 3 சுற்று கலந்தாய்வு மூலம் 58,916 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    • ஐ.சி.டி.அகாடமி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.
    • விருதினை அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

    நாகர்கோவில் :

    இந்திய தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் ஐ.சி.டி.அகாடமி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பகல்வியில் சிறப்பாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் தகவல் தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளுடனான சிறந்த செயல்பாட்டுக்கான விருது சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு கிடைத்தது. விருதினை அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

    கல்லூரி சார்பில் பேராசிரியர்கள் ஆன்றோ குமார் மற்றும் ஆன்றோ சேவியர் ரோச் கலந்து கொண்டனர். கல்லூரிக்கு இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான விருது கிடைத்தமைக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் மரிய வில்லியம், கல்லூரி நிதி காப்பாளர் பிரான்சிஸ் சேவியர், துணை முதல்வர் கிரிஸ்டஸ் ஜெயசிங், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

    • தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ஐ.சி.டி. அகாடமியுடன் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டது.

    ஐ.சி.டி. அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து மத்திய அரசின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்க உதவும் ஒரு அமைப்பாகும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயிற்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, ஐ.சி.டி. அகாடமி ஆசிரிய மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு, டிஜிட்டல் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆகிய துறைகளில் 7 தூண் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம், மெக்கா–னிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், ஏரோநாட்டிகல் என்ஜினீ–யரிங், ஏரோஸ்பேஸ்என்ஜி–னீயரிங் மற்றும் ரோபா–ட்டிக்ஸ் மற்றும்ஆட்டோ–மேஷன் என்ஜினீய ரிங் மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாண–வர்களுக்கு ஆட்டோ–கேட் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்வ–ழங்கப்ப–டுகிறது.

    இப்பயிற்சி மாணவ–ர்களுக்கு புராஜக்ட் ஒர்க் மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உதவுகிறது. மேலும், பேராசிரி யர்களு–க்கு ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி புராஜக்ட் மேற் கொள்ள ஏதுவாக அமைகிறது. இப்பயிற்சி, மாணவர்களை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, அவர்களை ஆட்டோடெ–ஸ்க்சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களா–கமாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் இந்த பயிற்சியின் மூலம் பயன–டைவார்கள்.

    புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வேந்தர் சீனிவாச–னிடமிருந்து கல்லூரி முதல்வர்இளங் கோவன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

    • கே.ஆர்.கல்வி நிறுவனங்க ளின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டுமெனில், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என உதயகுமார் பேசினார்.

    கோவில்பட்டி:

    நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    கே.ஆர்.கல்வி நிறுவனங்க ளின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

    சென்னை, லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் தலைவர்மணி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கல்லூரியின் மிகச்சிறந்த உள்கட்டமைப்பை பாராட்டி யதோடு, அப்துல் கலாம், நாராயணமூர்த்தி போன்ற நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளை சுட்டி க்காட்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.அதே நிறுவனத்தின் பிளாண்ட் மனித வளத்துறை தலைவர்உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    அவர் பேசும்போது, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பெற்றி ருப்பது இக்கல்லூரியின் தனித்தன்மையை காட்டுகிறது. மேலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டுமெனில், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன், தகவல் தொடர்பு திறன், சிந்தனை திறன் மற்றும் தலைமைத்துவம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக, இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். பின்னர், தலைமை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ×