search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
    • எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என புதின் தெரிவித்தார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ரஷியா சென்றுள்ளார். ரஷியா சென்ற அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறுித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.

    "எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என ஜெய்சங்கரிடம் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரஷியாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருமனதாக பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்திருந்தார்.

    • அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
    • அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையிடம் இந்திய தூதரகம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் இதுபோன்ற சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அங்குள்ள இந்திய தூதரகம் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் தீபாவளி விழா நடந்தது.
    • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகை இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார்.

    இந்நிலையில், தீபாவளி விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்துகொண்டார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
    • அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
    • காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர், "தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிறது."

    "இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

    "இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன."

    "இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளை பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய்சங்கர் இதற்கு முன் 2019-ல் மாநிலங்களை உறுப்பினராக தேர்வானார்
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் பதவி ஏற்பு

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    மேலும், பாபுபாய் ஜெசங்பாய் தேசாய் (குஜராத்), கேஸ்ரீதேவ்சிங் திக்விஜய் சங் ஜாலா (குஜராத்), நாகேந்த்ரா ராய் (மேற்கு வங்காளம்) ஆகியோர் பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஓ'பிரைன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகிய ஐந்து பேரும் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.

    இவர்களுக்கு மாநிலங்களவை சேர்மன் ஜெக்தீப் தன்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெய்சங்கர் ஆங்கிலத்திலும், ஓ'பிரைன், சென், ராய் ஆகியோர் பெங்கால் மொழியிலும் பதவி ஏற்றனர்.

    • இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிப்பதாக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.08.2023) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், IND-TN-06- MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை காண வேண்டுமென்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சரின் தலையீடும், ஆதரவும், இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
    • அதில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர் .

    புதுடெல்லி:

    கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    இவர்களில் மத்திய மந்திரியான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி ஆகஸ்டு 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும்.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில் மேற்கு வங்காளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள் மற்றும் கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறாது. ஏனெனில், இந்த இடங்களில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை.

    பா.ஜ.க.வில் 5 வேட்பாளர்கள், திரிணாமுல் காங்கிரசில் 6 வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களில் எஸ். ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    • உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல என ஜெய்சங்கர் கருத்து
    • பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தியாவை விமர்சிப்பது ராகுலுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று. தேர்தலில் ஒரு முறை ஒரு கட்சி வெல்வதும் மற்றொரு முறை வேறொரு கட்சி வெல்வதும் யதார்த்தமானது. உலகமே நம்மை கூர்ந்து கவனித்து வரும் வேளையில், உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல. இதன் மூலம் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை வளராது", என கூறியிருந்தார்.

    மேலும், "2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு சக்திகளின் உதவிக்காக அங்கே சென்று விளம்பரப்படுத்தப்படுகிறது" எனவும் கூறினார்.

    இந்த கருத்துக்கள் காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்க காரணமாயிருந்தவர்தான். இதை தாங்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்", என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.

    மற்றொரு தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா, "பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிக்கிறார். அவர் வேறு புது கதையை சொல்வது நல்லது. பிரதமர் மோடி, நாட்டின் 70-ஆண்டு கால வரலாற்றை எள்ளி நகையாடியிருக்கும் பொழுது, இந்திய அரசியலமைப்புக்கான ஆதார அமைப்புகளின் அழிவை குறித்து வெளிநாட்டில் ராகுல் கவலை தெரிவித்திருப்பது ஒன்றும் தவறல்ல", என கூறினார்.

    • படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதற்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

    கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

    இந்நிலையில், பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய ஜெய்சங்கர், இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். யார் வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய, வாக்கு வங்கி அரசியலுக்கான தேவையை கடந்து, நாம் புரிந்துகொள்ள தவறிய விஷயம் என்னவென்றால்... பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய விவகாரம் இதில் மறைந்துள்ளது. இது உறவுகளுக்கு நல்லதல்ல என நான் நினைக்கிறேன். கனடாவுக்கும் நல்லதல்ல. கனடாவில் நடந்த ஏதோ ஒரு விஷயம் என்றில்லாமல், அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் செயலுக்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கத்தை பல விஷயங்களில் குறை கூறினார். இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, மோடி இந்தியா எனும் காரை பின்னோக்கு கண்ணாடியை மட்டும் பார்த்தே இயக்குகிறார். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக விபத்து ஏற்பட போகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்நாட்டு விஷயங்களையும், பிரச்சனைகளையும் வெளிநாட்டிற்கு சென்று பேசி, அரசியலாக்குவது நமது தேச நலனுக்கு உகந்தது அல்ல. உலகம் நம்மை கூர்ந்து கவனிக்கிறது என தெரிவித்தார்.

    மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் இந்தியாவை விமர்சனம் செய்வது ராகுல் காந்திக்கு ஒரு பழக்கமாகி விட்டது என குறிப்பிட்டார்.

    ×