என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 241243"
- நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
- இவர் மீது தற்போது சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
இதனிடையே காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் இவர் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் வாயிலாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளத்தில் காயத்திரி ரகுராம் அவதூறான கருத்துகளையும் தவறான செய்திகளையும் பரப்பி வருகிறார். இதனால் காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவின் துணைத் தலைவரான ஜி.எஸ்.மணி புகாரளித்துள்ளார்.
- காயத்ரி ரகுராம் சென்னை ‘சைபர் கிரைம்' போலீசாருக்கு ‘ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
- பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சென்னை 'சைபர் கிரைம்' போலீசாருக்கு 'ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் அவர், ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாபு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
அவருடைய புகார் மனுவை 'சைபர் கிரைம்' போலீசார் ஆராய்ந்தனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
- அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
- அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.
அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இருந்தபோது உள்கட்சி விவகாரங்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். எனது 8 வருட கடின உழைப்பு, பணம், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு தூக்கி எறிந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜனவரி 27-ந் தேதி பாத யாத்திரை புறப்படுவதாகவும் களத்தில் சந்திப்போம் என்றும் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.
இப்போது அவரது பாத யாத்திரைக்கு போட்டியாக காயத்ரியும் தனது பாத யாத்திரையை தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது.
ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரையை" ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம்.
அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காயத்ரி ரகுராமை அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கினார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
சென்னை:
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.
- காயத்ரி கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி.
- பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
நடிகை காயத்ரி ரகுராமுக்கும் பா.ஜனதா தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இப்போது அவர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். காயத்ரியின் புகார்கள் குறித்து அகில இந்திய பா.ஜனதா மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
காயத்ரி, கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி, ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டு விட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சினையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன்.
- தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.
சென்னை:
நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
"பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.
என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது.
இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும்" என கூறியுள்ளார்.
- பா.ஜனதா கட்சியில் ‘சஸ்பெண்டு’ ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும்.
- பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.
இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.
பா.ஜனதாவில் இருந்து விலகியது தொடர்பான காரணம் குறித்து காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி வருமாறு:-
பா.ஜனதா கட்சியில் 'சஸ்பெண்டு' ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி துபாயில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பது தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ளது. 150 பேர் இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை என்னை பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறார்.
பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி எங்கே? அவர்கள் வெளியே வந்து பேசப் பயப்படலாம். அவர்களின் பதவி பறி போகலாம் அல்லது அவர்கள் குடும்ப ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். எனவே அவர்கள் பேச பயப்படுகிறார்கள்.
பா.ஜனதா கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் சேருவேன். இது என் தாய்வீடு என்று சொல்லி இருக்கிறேன். கட்சியில் சேர்க்காவிட்டால் கூட எனது ஓட்டு பா.ஜனதாவுக்குத் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன்.
அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை.
உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்.
அனைத்து ஆதாரங்களை சமர்பித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
- என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன்.
தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும்.
என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம்.
ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன்.
மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சார்லி சாப்லின், பரசுராம், விசில், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம்.
- இவர் தற்போது தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். பின்னர் காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
- கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர்.
- வெளிநாடு செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.
கோவை:
பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர். இப்படி செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுபோன்று சிக்கி கொண்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு தீவிர சட்டங்களை இயற்ற வேண்டும்.
நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழி குறித்து அங்குள்ள மக்களிடம் கூறி வருகிறேன். அப்படி ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றபோது, அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. எனவே தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
திராவிட இயக்கத்தினர் எப்போதும் தமிழை வளர்க்கவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டி முடிந்ததும், நிருபர்கள், டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல பதிவு செய்துள்ளீர்களே என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்தார். இதனால் நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்