என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்"
- பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
- இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.
மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.
இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார்.
தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
- கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
- போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு 31-ந் தேதி இரவு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஐரேனிபுரம் ஜஸ்டின் பணியாற்றினார்.
இந்த பஸ், இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்ற போது, இருளில் மறைந்திருந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுபாஷ் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
ஆனால் கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வருவதற்குள் கல் வீசிய மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசில், பஸ் டிரைவர் சுபாஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அவர்கள் தான் பஸ் மீது கல் வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
- வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடம்பற விளையைச் சேர்ந்தவர் ஜெனிஷா (வயது23). இவர் லேப் டெக்கரேஷன் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சம்பத்தன்று வெட்டு மணியில் உள்ள குருசடிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி ஏளனமாக பேசி தகராறு செய்ததாகவும் அவர் கல்லால் தாக்கிய தில் தலையில் காயம் அடைந்ததாகவும் மார்த்தாண்டம் போலீசில் ஜெனிஷா புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெனிஷா குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ெரயில் நிலையத்திலிருந்து இன்று அரசு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். செட்டிகுளம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென பஸ்ஸின் மீது கல்வீசினார்.
இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.அந்த வாலிபர் அந்த பஸ்ஸின் பின்னால் வந்த மற்றொரு பஸ் மீதும் கல்வீசி தாக்கினார். அந்த பஸ்ஸின் கண்ணாடியும் உடைந்தது. இரு பஸ்களின் கண்ணாடியும் உடைந்ததையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் எதற்காக கல்வீசி பஸ்சை உடைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இரண்டு பஸ்களில் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் கோட்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டவிரோதமாக கல் உடைத்து வாகனங்களில் கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது
- வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரான வன்னியூர் பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவரை கைது செய்தனர்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல் உடைத்து வாகனங்களில் கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் திருத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வேன் வந்துக்கொண்டிருந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டெம்போவில் எந்த அனுமதியும் இல்லாமல் கல் கடத்துவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரான வன்னியூர் பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்