search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242056"

    • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாயன் விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை அணுகி தங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ரூ.3.26 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், 1-வது வார்டு உறுப்பினர் ராஜகுமாரி கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார், அனந்தகிருஷ்ணன், தியாகராஜன், அழகேசன், முத்துக்குட்டி, முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.

    சேலம்:

    மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.

    முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணி நடைபெறுவதையொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அடுத்துள்ள ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் அருகே உள்ள சேலம்- சென்னை மார்க்க ரெயில் பாதையில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக 18 ராட்சத கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டது, கடந்த 4-ந் தேதி 6 கான்கிரீட் பாக்ஸ் பொருத்தப்பட்டு பணி நடைபெற்றது. மீதமுள்ள 12 பாக்ஸ் பொருத்துவதற்கான பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பனியின் போது சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்து கவனித்து வருகின்றனர், இந்த பணி நடைபெறுவதை–யொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ×