search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்நாத்சிங்"

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே.
    • நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.

    ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

    வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

    1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது.

    ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராணுவத்தில் வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி.
    • சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஆவணத்தையும் அவர்கள் டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர்.

    இந்த பிரச்சினை பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்டது. ராணுவ ஆள்சேர்ப்பில் இடஒதுக்கீடு வழங்காத நிலையில் ஜாதிச் சான்றிதழ் தேவையா என ஐக்கிய ஜனதாதளம் எம்பி குஷ்வாஹா கேள்வி எழுப்பினார். ராணுவத்தின் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி என்று கூறினார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து, ராணுவத்தை இழிவுபடுத்தி அவமதிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ராணுவ ஆட்சேர்ப்பில் சாதி அல்லது மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம்.
    • செயற்கை நுண்ணறிவை அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார்

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மனித குல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். இந்த பூமியில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம் மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் கூறினார்.

    மனித மூளை படைப்பாற்றல் கொண்டது, அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்றாலும், எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    செயற்கை நுண்ணறிவை மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    ×