என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ள அபாய எச்சரிக்கை"
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
- அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப் படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் கொட்டிவரும் கனமழையினால் பழனியில் உள்ள பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன.
65 அடி உயரம் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 61 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. குதிரயைாறு அணை அதன் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. வரதமாநதி அணை நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி நீர் வருகிறது.
சேலம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பை கருதி, தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்தது.
தற்பொழுது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இன்று நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- காவிரி நீர் வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு.
மாண்டியா:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன.
அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.
இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
- தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
- கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்