என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து"

    • இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
    • முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    • தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
    • தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

    பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.

    மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்.
    • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான தென்னரசு தொடங்கி வைத்தார்.

    இதில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வர்த்தக சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் செல்வராஜ், அரிவையார் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, கவிதா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் சபரிகிருஷ்ணன், சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல், ஆஸ்துமா, நீரிழிவு இருதய, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • ரேட்டல் எலி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்
    • ரேட்டல் எலி மருந்து பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது

    அரியலூர்:

    கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு பூச்சிக்கொல்லிக்கான மோனோகுரோட்டோபாஸ், புரோபனபாஸ், அசிபேட், புரோப்பனபாஸ் பிளஸ் சைபர் மெத்திரின், குளோர்பைப்பாஸ் பிளஸ் சைபர்மெத்திரின், குளார்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகள், ரேட்டல் என்ற பெயரில் விற்கப்படும் எலி மருந்தான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கு ஆறுமாத காலம் தடை விதித்துள்ளது. உயிருக்கு கடும் அபாயகரமானதாக உள்ள இவை பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கடைகள், சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் இவைகளை விற்பது தெரியவந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


    • விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியை டிரோன் எனும் எந்திரத்தை மூலம் தொடங்கி விட்டனர்.
    • 3 முதல் 4 ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வட்டத்தில் சமீபகாலமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாகுறை, கூலிதொகை உயர்வு, அதிகரித்து வரும் செலவு‌ போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்போது விவசாய பணிக்கு அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    வயல்களை உழவு செய்தல், வரப்பு சீர்செய்தல், நடவு நடுதல் உள்பட அனைத்து விவசாய தேவைக்கும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியிலும் டிரோன் எனும் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். டிரோன் மூலம் மணிக்கு 3முதல் 4ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    • ஆடுகள், மாடுகள், நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை.
    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க மருந்து முதலியவை வழங்கப்பட்டது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பேரளத்தை சுற்றியுள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி சிறப்பு முகாம் என்பது நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இஞ்சிக்குடி என்கின்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பின்பு அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்பகுதியில் உள்ள மாடுகள் ஆடுகள் நாய் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவர்கள் மாடுகள் வளர்க்கும் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க நோய்களுக்கான மருந்து, தீவனபுல், தாதுஉப்பு கலவை முதலிவை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், நாட்டுநல பணிதிட்ட அலுவலர் பாரி, பேரளம் பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், இஞ்சிக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் காசிராஜா மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட நாட்டுநலபணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.

    மேலும் வீராணம் ஏரியில்

    தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான

    பகுதியில் கிடந்தது. இதை

    யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குடிமங்கலம்:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்ததும் நம்மால் முடியுமா என்கிற அச்சம் வாலிபர்களை தொற்றிக் கொள்கிறது.
    • புதிய வகை மருந்தை நாக்கில் வைத்தால் போதும் என்றும் அது எளிதில் கரைந்து உடனடியாக வேலைய தொடங்கி விடும் என்றும் கூறுகிறார்கள்.

    இணைய தளங்களில் கொட்டி கிடக்கும் ஆபாச வீடியோக்களுக்கு இன்றைய இளைஞர்கள் பலர் அடிமையாகி கிடக்கிறார்கள். அதுபோன்ற வீடியோக்களில் உள்ள காட்சிகளை பார்த்து விட்டு முயன்று தோற்றுப் போகிறவர்கள் ஏராளம். அது போன்ற நபர்களே மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

    இதனால் நம்மால் எதுவுமே முடியாதோ?... என்கிற மனநிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களே மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்ததும் மேலும் பதட்டமாகி விடுகிறார்கள் என்கிறார்கள் டாக்டர்கள். இதுபோன்ற வாலிபர்களுக்கு இனிப்பாக இருக்கக் கூடிய முதல் இரவுகள் கூட கசப்பாகவே மாறிப் போய் இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே திருட்டுத் தனமாக சென்று பார்க்க முடிந்த பலான படங்கள் இன்று செல்போன் வழியாக வீடுகளுக்குள்ளேயே நுழைந்து விட்டன. பரந்து விரிந்து கிடக்கும் வக்கிரமான ஆபாச வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் இளைஞர்களால் கண்டு ரசிக்க முடிகிறது.

    இதுவே சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வாலிபர்கள் மத்தியிலும் இதுபோன்ற செக்ஸ் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதும் மருத்துவ உலகின் எச்சரிக்கையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

    இதனால் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்ததும் நம்மால் முடியுமா? என்கிற அச்சம் வாலிபர்களை தொற்றிக் கொள்கிறது. இதில் இருந்து மீள்வதற்கே அவர்கள் தவறான வழிகளை நாடுகிறார்கள்.

    "ஆண்மை" இல்லாதவன் என கட்டிய மனைவி எண்ணி விடக்கூடாதே என்கிற அச்சத்திலேயே மருந்து, மாத்திரைகளை இளைஞர்கள் பலர் தேடி .... தேடி... சர்பிடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது என்கிறது மருத்துவ புள்ளி விவரம்.

    இது தொடர்பாக மத்திய சுகாதார துறை ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 'வயாகரா டைப்' மாத்திரைகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டு செக்ஸ் விஷயத்தில் ஏற்படுத்தி 'வீக்'கான வாலிபர்கள் பலர் அடிமையாகி வீழ்ந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. வாலிப பருவத்தில் ஏற்படும் சில தீய பழக்க வழக்கங்கள் திருமணத்துக்கு பின்னர் தொடர்வதும் அதில் இருந்து மீள முடியாமல் பலர் தவிப்பதுமே வயாகரா போன்ற புதுவிதமான மருந்துகளை மருத்துவ சந்தைக்குள் இழுத்து வருகிறது என்றே கூறலாம். அப்படி புதிதாக வாலிபர்களை வசப்படுத்த வீரியம் மிக்க 'செக்ஸ் மருந்து' ஒன்று வந்துள்ளதாக கிளுகிளுப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு முன்னர் விற்பனைக்கு வந்துள்ள வயாகரா போன்ற அந்த ஆசையை தூண்டும் மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில் புதிய மருந்தின் விலையோ குறைவு என்றும் ஆனால் நிறைவான சுகத்தை அளிக்கிறது என்கிற கருத்தும் நிலவுகிறது. இது போன்ற மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

    எளிதில் கரையும் தன்மை கொண்ட மருந்தாக இருக்கும் புதிய வகை மருந்தை நாக்கில் வைத்தால் போதும் என்றும் அது எளிதில் கரைந்து உடனடியாக வேலைைய தொடங்கி விடும் என்றும் கூறுகிறார்கள்.

    குறிப்பிட்ட இந்த மருந்தை சாப்பிடுபவர்கள் உடனடியாக செக்சில் ஈடுபட வேண்டும் என்கிற மனநிைலக்கு தள்ளப்பட்டு விடுவதாகவும் அதன் பின்னர் தங்களது தாகம் தணிந்தால் மட்டுமே அவர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

    இது தொடர்பாக பாலியல் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ஆண்மை குறைபாடு இருப்பதாக கருதும் இளைஞர்கள் டாக்டர்களை அணுகி உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே செக்ஸ் பிரச்சினைகளுக்கு மருந்துகளை சாப்பிட வேண்டும். அவர்களாகவே கூவி கூவி செக்ஸ் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்தும் அது தொடர்பான வீடியோக்களை பார்த்ததும் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளப்படும் செக்ஸ் மாத்திரைகளும், மருந்துகளும் நாளடைவில் குறிப்பிட்ட மருந்துகளுக்கு அடிமையாக்கி பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதே உண்மை.

    இது ஒருவித "செக்ஸ் போதை" போல மாறி விடும் ஆபத்தும் உள்ளது. எனவே இளைஞர்கள் 'செக்ஸ்' விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

    எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். செக்சுக்கு மட்டும் அது இல்லையா என்ன?

    • சூர்யா வயலுக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
    • சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் சூர்யா (வயது 25) இவர் தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காததால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சூர்யாவின் தந்தை ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×