search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பிடம்"

    • தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    • முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
    • தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களான ஸ்ரீராம், ஆகாஷ், கணேஷ், சிவா ஆகியோருக்கு தலா ரூ.3,000 ரொக்க பரிசினை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வன் வழங்கி பேசும்போது,

    கல்விதான் மாணவர்களுக்கு நிரந்தரமான சொத்து. தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவை தான் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்றார். விழாவில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

    ×