search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு"

    • இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
    • துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது.

    விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

    ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் 8 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஏல முடிவில் இந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விலைபோனது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • துறைமுகம் வெறிச்சோடியது
    • புயல், மழை எச்சரிக்கை எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல் மழை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி அவ்வப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது.

    மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவந்தனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதள மாகக்கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த3மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரை யோரமாக நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது.

    இதேபோல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம் கீழம ணக்குடி, மணக்குடி, பள்ளம் ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரை கிராமங்களிலும் பெரும்பா லான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
    • 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    பேராவூரணி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.

    மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

    கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.

    விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
    • அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

    அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
    • மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    • நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    • 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த இந்த படகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் துறை ரோந்து பணி, மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் துறைமுகம் இல்லாத காரணமே படகு கடலில் மூழ்கியது. அதனால் இந்த பகுதியில் துறைமுகம் கட்டித் தரவும் மற்றும் போதுமான வசதி ஏற்படுத்தியும் தரவேண்டுமென இங்குள்ள மீனவ பொது மக்கள் சாலைமறியல் செய்யபோவதாக தெரிவித்தனர். இன்று காலை முதலே சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீனவ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக கிடைத்தன.
    • மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.3500 விலை போனது. இது முந்தைய விலையை விட ரூ.1500 குறைவு

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,

    1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரு கிறது.

    குளச்சல் கடல் பகுதி யில் ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பலத்த காற்று வீசியதால் மீன் பிடித்தொழில் பாதிக்கப் பட்டது. கடந்த 2 வாரமாக மழை, காற்று ஓய்ந்த நிலை யில் விசைப்படகுகள் மற்றும் பைபர் வள்ளங்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன.

    ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்பட குகளில் 58 படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.3500 விலை போனது. இது முந்தைய விலையை விட ரூ.1500 குறைவு. இது போல் தலா கிலோ ரூ.38-க்கு விலை போன நாக்கண்டம் மீன் நேற்று தலா கிலோ

    ரூ.32-க்கு விலை போனது. ரூ.400-க்கு விற்ற தோட்டு கணவாய் ரூ.320 விலையும், ரூ.320 க்கு விற்ற ஓலக்கணவாய் ரூ.240-க்கு விலை போனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியா பாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். மீன்கள் அதிகம் கிடைத்தும் குறை வான விலை போன தால் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    • ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆன்றனி பீட்டர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு வலையின் போல்டு உடைந்து கீழே விழுந்ததில் ஆந்திராவைச் சேர்ந்த ராமுலு (வயது 52) என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை சக மீனவர்கள் அதே படகில் அவசர அவசரமாக கரைக்கு கொண்டு வந்தனர். மாலை 4.15 மணிக்கு இவர்களது விசைப்படகு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமுலுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மீன்வளத்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி சென்றனர்
    • மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று இரவு சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்டனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டு மீறி சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×