search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எஸ்.சி. தேர்வு"

    • திட்டக்குடி அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் மறியல் நடந்தது.
    • ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்து விட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே கிரீன்பார்க் தனியார் பள்ளியில் டி.என். பி. எஸ்.சி. குரூப் 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்வு எழுத வந்தவர்கள் காலதாமதம் எனக் கூறி 10-க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த மாண–வர்கள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை–மறியலில் ஈடுபட்ட–னர்.

    தகவலறிந்து வந்த திட்ட–க்குடி டி.எஸ்பி. அசோகன் மற்றும் ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்ததுவிட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்கள் அனைவரும் கோபத்துடன் திரும்பி சென்றனர். இதில் சிலர் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.

    • திருச்சி மாவட்டத்தில் 320 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்றது
    • தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்

    திருச்சி:

    தமிழக அரசுத்துறைகளில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், வி.ஏ.ஓ., பில் கலெக்டர் உள்ளிட்ட 7ஆயிரத்து 301 காலி பணியிடங்களை நிரப்புதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு இன்று காலை தொடங்கியது.

    9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்பதால் 9 மணிக்கு மேல் தேர்வுமையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்.

    பல நாட்கள் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுத முடியாமல் போனதால் வருத்தத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் 320 தேர்வு மையங்களில் 94 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வினை எழுதினர்.

    தேர்வுமையங்களில் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க 320 தேர்வறை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், சப்கலெக்டர் தலைமையில் 12 பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதேநேரம் தேர்வுமையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்துதரப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளியில் தேர்வு எழுத வந்த மணப்பாறையை சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல்சேர் வழங்கப்படாததால் சிரமப்பட்டு முட்டிக்காலில் வந்த பெண்ணை காவல் உதவிஆய்வாளர் அகிலா மற்றும் ஊர்க்காவல்படை பெண் போலீஸ் இணைந்து தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டதை பலரும் பாராட்டினர்.

    இதுபோன்ற தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலெக்டர் மா.பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    • தமிழகத்தில் குரூப் 4 போட்டித் தேர்வு வரும் 24-ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஹால்டிக்கெட்டை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை :

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர்.

    அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.

    விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×