என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மைக்ரோசாப்ட்"
- ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
- தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு.
டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
"அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.
வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.
- மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது.
- சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க வாஷிங்டனை மையமாக கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
சமீபகாலமாக பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை நீக்கி வந்தது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை இன்று நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது. சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க வாஷிங்டனை மையமாக கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனையை துவங்கி இருக்கிறது.
- புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மாதம் சர்ஃபேஸ் லேப்டாப் 5 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்தியம முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் துவங்கியது.
தற்போது புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மல்டி-பிராண்டு ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.
விலையை பொருத்தவரை சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 9 வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்ஃபேஸ் ப்ரோ கீபோர்டு (பிளாக்) இலவசமாக வழங்கப்படுகிறது. சர்ஃபேஸ் லேப்டாப் 5 வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரத்து 499 மதிப்புள்ள சர்ஃபேஸ் பாப் ரெட் ஆர்க் மவுஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
சர்ஃபேஸ் லேப்டாப் மைடல் 13.3 மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2256x1504 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி கேமரா, விண்டோஸ் ஹெல்லோ வசதி உள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்களை கொண்ட ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12th Gen கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் X கிராஃபிக்ஸ், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் 9 ப்ரோ 2-இன்-1 கன்வெர்டிபில் மாடல் ஆகும். இதில் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 12th Gen கோர் i5 அல்லது கோர் i7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வசதியுடன் கிடைக்கிறது. இவைதவிர மற்ற அம்சங்கள் சர்ஃபேஸ் 9 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 11 ஓ.எஸ். உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாக துவங்கி இருக்கிறது.
- புது விண்டோஸ் 11 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமானது.
விண்டோஸ் 11 அம்சங்களில் சிலவற்றை விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ப்ரிண்டிங் சார்ந்த அம்சங்கள் தான் விண்டோஸ் 10-இல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ப்ரிண்டிங் அம்சம் ப்ரிண்ட் செய்யும் போது பின் வழங்க இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது போலி கனெக்ஷன்கள் மற்றும் பிழைகளை தவிர்க்க முடியும். இது விண்டோஸ் 1- வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. விண்டோஸ்-இல் புது மாற்றங்களை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் பிரைவசி ஆடிட்டிங் பெயரில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த அம்சம் மூலம் மைக்ரோபோன், கேமரா மற்றும் லொகேஷன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். விண்டோஸ் 10 வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் விண்டோஸ் 11 அம்சங்கள் விண்டோஸ் 10-க்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புது மாற்றம் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பழைய படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறு புது ஓஎஸ் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் 2024 வாக்கில் விண்டோஸ் 12 ஓஎஸ் வெளியாக வேண்டும். எனினும், இது பற்றி மைக்ரோசாப்ட் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
- புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
வாஷிங்டன்:
உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும் இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்