search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிழற்குடை"

    • வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் பஸ் நிறுத்தம் இருந்து வருகின்றது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருவதால் ஏராளமான பொதுமக்கள்பஸ் நிறுத்தத்தில் நின்று சென்று வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் பொதுமக்கள் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அரசு அறிவித்த கால கெடுவிற்குள் பணிகளை தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

    மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிழற்குடை மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும்.

    குனியமுத்தூர்.

    கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் காந்திநகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் செல்லும் பயணிகள் பஸ் ஏறும் நிறுத்தத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் அதில் உட்கார முடியாத நிலை காணப்படுகிறது.

    இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்தால் அவர்கள் பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் பயணிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    நிழற்குடை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. நிழற்குடையை நோக்கி வரும் வயதான பயணிகள் கல் தட்டி கீழே விழுந்து எழுந்து செல்லும் சூழ்நிலையை காணப்படுகிறது.

    அதே போன்று அதற்கு எதிர் புறம் பொள்ளாச்சி செல்லக்கூடிய பயணிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை எதுவுமே கிடையாது. இதனால் வெயிலில் நின்று தான் பேருந்து ஏறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே பொள்ளாச்சி ரோடு காந்தி நகரில் பஸ் ஏறக்கூடிய பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன.

    காங்கயம் :

    காங்கயம் தாராபுரம் மெயின்ரோட்டில் நகரின் பிரதான பகுதியான களிமேடு மற்றும் குதிரை பள்ளம் ரோடு பிரிவு அருகே காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி முன்பு நிழற்குடை மற்றும் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன. இது குறித்து மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும்ரூ.9லட்சம் செலவில் அழகான விசா லமான முறையில் ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சி மற்றும் காங்கயம் ரோட்டரி டவுன் சங்கம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • சாலையோர பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. சாலையோரம் பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுத்து அசத்தி யுள்ளனர்.

    நீண்ட தூரம் மரமோ, நிழற்குடையோ இல்லாத பகுதிகளில் சாலை யோரம் நிற்கும் போலீசாருக்கு மடக்கும் தன்மை யுடன் கூடிய நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ேபாலீசாருக்கு 250 பிரத்யேக சுருக்கி மடக்கும் குடை வாங்கப்பட்டுள்ளது. கவர்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 120 குடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.

    • பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
    • கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தினந்தோறும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு வேலை தொடர்பாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். புளியால் சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    பயணிகள் நிழற்குடை அருகே ஆக்கிரமிப்பாலும், எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் நிழற்குடை மேல் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நிழற் குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நிழற்குடையின் மேல் உள்ள பிளக்ஸ் போர்டையும் அருகில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நிழல் தரும் வகையில் அமைந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
    • மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

    இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய் பாளையம் பிரிவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஏற்கனவே நிழற்குடை ஒன்று உள்ளது.

    இதில் மர்ம நபர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்சுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சாலை ஓரங்களிலேயே நின்று பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    காரமடை-தோலம்பாளையம் சாலை தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் சாலையாகவும் இருப்பதால் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

    இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் சாலையோரங்களில் நின்று பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

    மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. விபத்துகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பணிக்கு செல்வோர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவும், பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
    • இருதரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் ஊராட்சியில் பொள்ளாச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி பா.ஜ.க.வினர் தடுத்தனர். மேலும் இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து, பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செய்யவிடாமல் பா.ஜ.க. வினர் இடையூறு செய்வதாக கூறி தி.மு.க. வினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதையடுத்து உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மடத்துக்குளம் தாசில்தார் செல்வி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களுடன் தாசில்தார் செல்வி பேச்சு வார்த்தை நடத்தினார்.உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருதரப்பினரும் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், இருதரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிழற்குடையை சரி செய்ய வேண்டும்
    • சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் பகுதியில் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டு மணி வரை 2¾ கிலோமீட்டர் நீளம் மிகப் பிரம்மாண்டமான இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேற்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனை அடுத்து பள்ளி, கல்லூரி நேரங்கள் மற்றும் காலை மாலை நேரங்களில் நெரிசல் வெகுவாக குறைந்தது.

    இதற்காக பாலத்தின் மேற்பகுதியில் பயணி கள் அமர்ந்து செல்ல நாகர்கோவில் - திருவனந்த புரம் வழியாக செல்லும் பயணிகளுக்காக இடது பக்கம் இரும்பிலான நிழல் குடை அமைக்கப்பட்டி ருந்தது, அதன் மேற்பகுதியில் பிளாஸ்டிக் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திடீரென அந்த நிழற் குடை சரிந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. இன்று காலையில் பார்க்கும் பொழுது அந்த நிழல் கூடை வெளிப்பக்கமாக சரிந்துள்ளது.

    இந்த நிழற் குடை பெயர்ந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் நிழல் குடை எவ்வாறு சரிந்தது என தெரியவில்லை, காற்றின் வேகத்தால் சரிந்ததா அல்லது, ஏதேனும் விஷமிகள் பெயர்துள்ள னரா என தெரியவில்லை.

    சம்பந்தப்பட்ட அதி காரிகள் விரைந்து சென்று நிழற்குடையை சரி செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பழுதடைந்த நிழற்குைடயை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவு
    • உடனடியாக கழிவுநீர் ஓடை களை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சுத்தம் செய்ய மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மேயர் மகேஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இதுவரை 39 வார்டுகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று 42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது இருளப்புரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒன்று மிகவும் மோசமான நிலையில் பழுத டைந்து காணப்பட்டது.இதையடுத்து அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.அந்த இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

    குமரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் அந்த பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இருளப்பபுரம் சந்திப்பில் பூங்கா அமைப்பது தொடர் பாகவும் ஆய்வு நடத்தப்பட் டது. அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள மேயர் மகேஷ் அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து வேதநகர் பீச் ரோடு பகுதி களில் அவர் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கான போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளில் மணல் நிரம்பி காணப்பட்டது. உடனடியாக கழிவுநீர் ஓடை களை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சுத்தம் செய்ய மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    ஆய்வின் போது மாநக ராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அபிராமம் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம் கிராம மக்களும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அபிராமம் - பார்த்திபனூர் செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏற வேண்டும்.

    பொட்டகுளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொட்ட குளம் கிராம மக்க கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பஸ் நிறுத்தம் இருக்கும் மெயின் ரோட்டுக்கு 5.கி.மீ தூரம் நடந்தே வரவேண்டி உள்ளது.

    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதற்கும், வெளியூர் செல்லவும் சிரமப்படுகிறோம்.இந்த பஸ் நிறுத்த்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க முடியாமல் வயதா னவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இந்த பஸ் நிறுத்தத்திற்காக 30 ஆண்டுகளாக நிழற்குடை கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×