என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற"
- மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலு–வலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய–மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்–படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்–பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புறசூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர்சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்"- செயல்படுத்தப்படுகிறது.
இவ்வியக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செம்மரம், மகாகனி, ரோஸ்வுட், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, புளியன், கடம்பு, வாகை உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
அதற்கான மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இம்மரக்கன்றுகள் வரப்பு ஓரங்களிலும், வயல் முழுவதும் நடவு செய்யலாம். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல், தோட்டக்கலை விரிவாக்க மைய நாற்றாங்காலில் இருந்து பெற்று நடவு செய்துகொள்ளலாம். முன் உரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதால் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
- தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
ஈரோடு:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியத்தில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது.
இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.பனை மரம் சார்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களை www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.
கூடுதல் விபரத்தை, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் அறியலாம். இந்த தகவலை தொழி லாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்