என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வர்த்தகம் பாதிப்பு"
- ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
- 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ராமநாதபு ரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. ஒரு சில மீன் ரகங்களுக்கு போதிய விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வழங்காததை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீன்பிடி தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
இது தொடர்பான எச்சரிக்கையையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மற்றும் அதன் சார்பு தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.11 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை சீற்ற காலங்களில் படகுகள் சேதம் அடைவதை தடுக்கவும், படகுகளை நிறுத்தி வைக்கவும் ராமேசுவரம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் வருமான இழப்பிற்கு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- அரிசி ஆலை- கடைகள் இன்று மூடியதால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது.
கடலூர்:
பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது. இந்த வரி விதிப்பினால் அரிசி விலை கணிசமாக உயரும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரிசி ஆலை அதிபர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரிசி ஆலை அதிபர்கள், அரிசி கடை உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 250 அரிசி கடைகள், 30 அரிசி ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகள் மற்றும் கடைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மூடினர். அதன்பின்னர் கடைகள் முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை பரிசீலனை செய்ய கோரி பதாகைகள் வைத்திருந்தனர். இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்