search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி20 மாநாடு"

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார்.
    • அவர் இன்று புறப்பட்டு செல்ல வேண்டிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார்.

    மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன.

    விமானம் சரியாகும் வரையில் அவர் இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செல்ல வேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா பிரதமர் செல்ல வேண்டிய சிஎப்சி 001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ஒரே நாள் இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

    • அடுத்த வருடம் பிரேசில் ஜி20 மாநாட்டை நடத்த இருக்கிறது
    • பிரேசில் அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி

    டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்ததாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் பிரேசில் டி20 மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான தலைமையை பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார்.

    டிசம்பர் 1-ம்தேதி முதல் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தியா சார்பில் வருகிற நவம்பரில் மற்றும் ஒரு ஜி20 மாநாடு காணொலி வாயிலாக நடைபெறும் என பிரதமர் மோடி அறவித்துள்ளார். 

    • பாரத் மண்டபத்தில் 2-வது நாள் மாநாடு நடைபெற்று வருகிறது
    • காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில், மாநாடுகள் நடைபெற்றன. உச்சி மாநாடு நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இன்றுடன் முடிவடைகிறது.

    மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை தயார் செய்ய சுமார் 2700 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.

    வெற்றிகரமாக மாநாடு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் குளம்போல் பாரத் மண்டபம் காட்சியளிக்கிறது.

    • வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
    • இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தடைந்தார். அவருடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    நேற்று தொடங்கிய ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி20 டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. ஒருமித்த கருத்துடன் வெளியிடப்பட்ட நிலையில், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவித்தார். பின்னர் நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் பங்கேற்றார்.

    இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் 11.15 மணியளவில் வியட்நாம் புறப்பட்டு சென்றார்.

    • பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என வலியுறுத்தல்
    • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன

    இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

    ஒரே தவணையில் அளிக்கும் இந்த நிதி, பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி, பசுமை பருவநிலை நிதிக்கு (GCF) சென்றடையும். இந்த நிதி அமைப்பு 194 நாடுகளுடன் உருவாக்கப்பட்டது.

    இந்த தகவலை இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.

    • ஆப்பிரிக்கா யூனியன் தலைவர், நைஜீரியா அதிபர் மலர் வளையம் வைத்து மரியாதை
    • கனடா, ஆஸ்திரேலிய பிரதமர்களும் மரியாதை

    ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. முன்னதாக 8.30 மணியளவில் உலகத் தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி உலகத் தலைவர்கள் ராஜ்காட் வந்தனர். அவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் விருந்து நடைப்பெற்றது.
    • எந்த காரணத்தையும் ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவிக்கவில்லை.

    ஜி-20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அளித்த இரவு விருந்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்கவில்லை. அதற்கு எந்த காரணத்தையும் ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவிக்கவில்லை.

    அதேபோல சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

    • ஜி20 மாநாடு நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது
    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவர்களுக்கு விருந்து அளித்தார்

    ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    முதல்நாள் மாநாட்டின்போது இடைவேளை நேரத்தின்போது இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் ஈடுபட்டார்.

    இதற்கிடையே, உலகத் தலைவர்களின் மனைவிகளுக்கு, இந்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்து ஜெய்ப்பூர் இல்லத்தில் அளிக்கப்பட்டது. அப்போது தினை உணவுகள் வழங்கப்பட்டதாகவும், தெருவில் விற்கப்படும் சில உணவுகளை ருசி பார்த்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த சிறப்பு விருந்தில் துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரிசீயஸ் நாட்டின் முதல் பெண்மணிகள் கலந்து கொண்டனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அதிபர்களின் மனைவிகள், அந்நாட்டின் முதல் பெண்மணிகள் என அழைக்கப்படுவது வழக்கம்.

    • ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.

    சிட்னி:

    ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.

    இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் விருந்தளித்தார்.
    • இதில் கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர், பிரதமர் வரவேற்றனர்.

    புதுடெல்லி:

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

    சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர்.

    இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

    • ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர்.
    • ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார். பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு பெரிய கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் அமைக்கப்படும் என்று இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து கூட்டாக அறிவித்து உள்ளன.

    தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழித்தடமானது, ஜி20 உச்சிமாநாடு துவங்கும் முன்பு அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் சேர்ந்து அறிவித்த சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிகிறது.

    இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொருளாதார வழித்தடம் அமைப்பது தொடர்பாக நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. மேம்பட்ட இணைப்பு மூலம், ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே இந்த வழித்தடம் பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தும்.

    புதிய வரலாற்று சிறப்புமிக்க வழித்தடம் தொடர்பான திட்டத்தில் நாடுகள் இடையே இணைப்பு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் அதே வேளையில், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை அளிப்பதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். 

    • ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு.
    • விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்கள், இந்திய மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு.

    ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வரவேற்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    சிறப்பு விருந்தின் அங்கமாக 50 முதல் 60 இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விருந்தினர்களுக்கு இசை கலைஞர்கள் இந்திய இசையை விருந்தாக்கவுள்ளனர். விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் மும்பையில் பிரபலமான பாவ் என ஏராளமான உணவு வகைகள் தயாராகி இருக்கிறது.

    ×