search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் உடைப்பு"

    • ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை மணி ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
    • ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சத்தி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்திலேயே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 5-ந் தேதி அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தின் மீது பெரிய கல்லினை போட்டு உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை மணி ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் எச்சரிக்கை ஒலி வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபரின் கைரேகைகளை சேகரித்தனர்.

    மேலும், ஏ.டி.எம். மையத்தின் எச்சரிக்கை மணி ஒலித்ததால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஏ.டி.எம். மையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தறிபட்டறை தொழிலாளியான ஈரோடு அசோகபுரம் ஐயங்காடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராகுல் (வயது 21) என்பது கண்டுபிடி க்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு ராகுலை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். கைதான ராகுல் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மணிகண்டனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது.
    • குடிபோதையில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பாரதி சாலை காதி கிராப்ட் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகின்றது.

    நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டு ஏ.டி.எம்.எந்திரத்தை தாக்கி சேதப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாலிபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சி செய்கிறாரா? என கருதி உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், கடலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26 ) என்பது தெரியவந்தது.

    இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் இது தொடர்பாக நேற்று கடலூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த போலீசார் சரியான முறையில் இவரது புகாரை கேட்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மணிகண்டனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது. மேலும் குடிபோதையில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்து வந்த காரணத்தினால் போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாதுகாப்பாக இறக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இன்று காலை மணிகண்டனுக்கு மதுபோதை தெளிந்த பிறகு கடலூர் புதுநகர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான இம்பீரியல் சாலையில் மது போதையில் வாலிபர் தனது குடும்ப பிரச்சினையை போலீசார் விசாரிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு அதிகளவில் மது குடித்து ஏ.டி.எம் எந்திரத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரும்பாக்கத்தில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று அதிகாலை அலாரம் ஒலித்தது.
    • பணம் இருந்த பெட்டியை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    வேளச்சேரி:

    பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் ஒலித்தது.

    சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. பணம் இருந்த பெட்டியை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×