search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூரம்"

    • 2-ந்தேதி விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு அமையபெற்ற இந்த கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உண்டு.

    இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.

    இதையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உற்சவ மூர்த்திகள் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழக்கத்துடன் ஆடிப்பூர விழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு நின்ற ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 2-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெரும் திருவிழாவில் தினமும் சாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி தேரோட்டமும், 2-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
    • ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 6 மணி அளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் சன்னதியில் பராசக்தி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சன்னதியில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

    அதன்பிறகு சாமி ஆலயத்தை வலம் வந்து, தீபாராதனை நடந்தது. மாட வீதிகளில் சாமி வீதி உலாவும் நடந்தது. இரவு 8 மணிக்கு தீபாராதனை, வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை நாகராஜன் தலைமையிலான குருக்கள் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • 10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்று இரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுகிறது.
    • தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டாள் கோவில் தேரின் மேல் பகுதியில் இதுவரை மூங்கில் கொண்டு கொடுங்கைகள் இருந்தன.

    இதையடுத்து இரும்புகளை கொண்டு கொடுங்கை புதிதாக அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. இந்த கொடுங்கைகளை ராஜபாளையம் ராம்கோ நிறுவனம் சார்பில் அமைத்து தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்த கொடுங்கைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஆண்டாள் கோவிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டாள் கோவில் தேரில் இதற்கு முன்பு இருந்த கொடுங்கைகள் மூங்கிலால் ஆனது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ராம்கோ நிறுவனத்தினர் இரும்பினால் கொடுங்கைகளை செய்து கொடுத்துள்ளது. அது பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பல ஆண்டுகளுக்கு சேதமடையாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
    • 31-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

    விழாவின் 4-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது
    • 1-ந்தேதி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலா நடைபெற உள்ளது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தாிசனம் செய்து விட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு காலையிலும், மாலையில் விநாயகர் உற்சவ உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை காலை சுமார் 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெறுகிறது. இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 25-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.
    • வருகிற 31-ந்தேதி ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள்.

    4-ம் திருவிழாவான 25-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) இரவு 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சள் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 31-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 2-ந்தேதி ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர விழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை, இரவு நேரங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதியும், ஆகஸ்டு 1-ந் தேதி ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும், 2-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருமாங்கல்யதாரணம் என்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இந்த திருவிழா வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    வேலூர் கோட்டையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கோட்டைக்கு வருபவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு தரிசனத்துக்காக வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்புர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 24-ம் ஆண்டாக வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.

    அன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக 22-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி காலை 6 மணிக்கு பிறகு கொடியேற்றம் நடக்கிறது. தொடந்து விழா நாட்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.

    1-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், காலை 10.25 மணிக்கு அம்பாள் அபிஷேகமும், வளையல் சாற்றுதல், அர்ச்சனை தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல கங்கா பாலார் ஈஸ்வரர் 22-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி பஞ்சபூத மகாயாகம் நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளினாலேயே ஸ்ரீ கங்காபாலார் ஈஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்கிறார்கள்.

    மேலும், இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 26-ந் தேதி வரை ஒவ்வொரு வெள்ளியன்றும் ஆடி வெள்ளி விழா நடைபெறுகிறது. 6 வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.

    • 28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
    • 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந்தேதி ஆண்டாள் சயன சேவை, வருகிற 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தற்போது தேர் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஆடிப்பூர திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×