search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர்"

    • காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் இருக்கும் குறுக்குப்பட்டி ஏரிக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதால் தண்ணீர் செல்ல உரிய பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நெடுஞ்சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக ஒரு நீர்வழி பாதையை உருவாக்கி தற்காலிக தீர்வு ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்களை அழைத்து ஓமலூர் தாசில்தார் தலைமையில், பொதுப்பணி துறைஅதிகாரிகளும் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் அனைத்து நீர் வழி பாதைகளையும் அளவீடு செய்து நிரந்தர நீர்வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறி பொதுமக்கள், பட்டாதாரர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றனர்.

    அதன்பிறகு உபரிநீர் நிறுத்தப்பட்டது. மழையும் குறைந்து போனது. ஆனால் நீர் வழிப்பாதை அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கி விட்டது. இரவு பெய்த கன மழையில் மீண்டும் ஏரியில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    இதனால் மழை நீர் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது. இந்த மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் கடைக்காரர்கள் இடையே ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் ஏற்கனவே நெடுசாலையில் பெருக்கெடுத்து ஓடியது போல் மீண்டும் திருப்பி விட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிபட்டு வருகின்றனர். 

    • சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
    • இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அருகே உள்ளவர்கள் அடைத்து உள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

    எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது.
    • தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக செல்கிறது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.நாவல் ஏரியின் பாசன பரப்பளவு சுமார் 300 ஏக்கர் ஆகும்.

    இந்த நிலையில் நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக தாழைவாரியில் செல்கிறது.இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே உடனடியாக கோவிலூர் நாவல் ஏரியின் வரத்து வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
    • இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நேற்று பெய்த மழையினால் டி.எம்.எப் மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக ஒரு புதிய மோட்டார் ஒன்றை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து செல்லும் வரை சரி செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    ×