search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கைது"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 150 கிராம் பாக்கெட்டுகள் பறிமுதல்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பல்லாவரம் அம்மன் கோவில் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த குமார் ( வயது 22), நவாப் (19), சக்திவேல் (23) என்பதும், அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • மரத்தில் பரண் அமைத்து போதையில் மிதப்பு
    • 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானமூர்த்தி (வயது25), மோட்டூரை சேர்ந்த சிவகுமார் மகன் பூந்தமிழன்(21) இவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்தில் நண்பர்களாகினர்.

    நாளைடைவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், கஞ்சா அடிக்க தினமும் அதிகவிலை கொடுத்து வாங்குவதை விட வீட்டுக்குள் செடி வளர்த்து புகைக்க முடிவு செய்தனர்.

    ஞானமூர்த்தி நாரியூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, வீட்டின் அருகே எருக்கஞ்செடிக்கு நடுவில் கஞ்சா செடி வளர்த்தார்.

    வளர்க்கும் கஞ்சாவை ரகசியமாக புகைக்க, ஊரை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு உயரமான மரத்தின் மீது பரண் அமைத்தனர்.

    தினமும் இங்கு வந்து பரண்மீது ஏறி கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    தகவல் அறிந்த கந்திலி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் ஞானமூர்த்தி, பூந்தமிழனை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.

    • 1 கிலோ பறிமுதல்
    • வாகன சோதனையில் சிக்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ரெட்டைகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக அரக்கோ ணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் காஞ்சீபு ரம் மாவட்டம் சுங்குவார்சத் திரம் பகுதியை சேர்ந்த ஜாகீர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 20), அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த சாருன் பாலசந்திரன் (20) என்பதும், இவர்கள் கஞ்சா விற்க முற்பட்டதும் விசார ணையில் தெரியவந்தது. இத னையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். ஜாகீர் உசேன் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பது விசாரனையில் தெரிய வந்தது.

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
    • கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவில் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது .

    இதையடுத்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, சிறிய அளவிலான கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பார்த்திபன்(வயது28) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 1 கிலோ சிக்கியது
    • மேலும் ஒருவரை பிடிக்க தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இதனையெடுத்து பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை குணா என்கிற குணசேகரன் (வயது 29) என்பதும், தப்பி ஓடிய வாலிபர் அதே பகுதி சேர்ந்த வினோத் (29) என்பதும் தெரியவந்தது.இவர்கள் இருவரும் விற்பனை செய்ய ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் குணா என்கிற குணசேகரனை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    ×