search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவு விழா"

    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.
    • சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பங்கேற்கிறார்.

    186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது.

    விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்

    நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
    • நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஷரத் கமல் மற்றும் நிகாத் ஜரீன் ஏந்திச் சென்றனர்

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

    கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.

    இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.

    அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

    பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

    • குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா நடந்தது.
    • இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் சேவை அமைப்பின் சார்பில் குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்திரன் வரவேற்றார். இணை செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் தலைமை பயிற்றுனர் குருசாமி மற்றும் பயிற்சி அளித்தவர்களை பென்னிங்டன் நூலக கமிட்டி செயலாளர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் கவுர வித்தனர். பயிற்சிக்கு உறு துணையாக இருந்த அனை வருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது‌.பயிற்சியாளர்கள், மக்கள் சேவை மைய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.

    ×