search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் பலி"

    • குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ள மகனை தாய் தொடர்ந்து கண்டித்தார்.
    • இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனுக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த கபிரியேல் கிங் மனைவி ஜெலின் மேரி (வயது56). இவருக்கு ஜான் வினோத்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள இவர்களது வீட்டின் மேல் பகுதியில் ஜெலின் மேரி மற்றும் இவரது மகள்கள், கணவருடன் வசித்து வருகின்றனர். கீழ்ப்பகுதியில் மகன் ஜான் வினோத்குமார் வசித்து வருகிறார். ஜான் வினோத்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை ஜெலின் மேரி தொடர்ந்து கண்டித்தார்.

    இருந்தபோதும் அவர் குடி பழக்கத்ைத நிறுத்தவில்லை. இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான் வினோத்குமாருக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜான் வினோத்குமார் தனது தாய் மேரி திட்டுவதால் மனம் உடைந்து தொடர்ந்து என்னை திட்டுவதால் நான் இறந்து விடுகிறேன் என்று கூறி தான் வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

    உன்னுடைய குடிப்பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை நான் கண்டித்தும் நீ திருந்த போவதில்லை என்று தாய் ெஜலின் மேரியும் மகன் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்து விட்டார். சற்று நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கபிரியேல்கிங் தனது உறவினர்கள் உதவியுடன் மகன் மற்றும் மனைவியை கொடைக்கானல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஜெலின் மேரி பரிதாபமாக பலியானார். மகன் ஜான் வினோத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இரவு தனது சொந்த ஊரான பனமரத்துப்பட்டிக்கு திரும்பி கொண்டிருநத்தார்.
    • செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துவிட்டார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் அருகில் சேலம் மாவட்டம் ஜோதி என்பவர் தனது மகன் விக்னேசுடன் மாரண்டஹள்ளி அங்காளம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு தனது சொந்த ஊரான பனமரத்துப்பட்டிக்கு திரும்பி கொண்டிருநத்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து விக்னேஷின் தாயார் ஜோதி நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது பின்னே செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துவிட்டார்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர் சக்திவேல், ஓட்டுநர் அதியமான் ஆகியோர் காயமடைந்த விக்னேசுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இறந்த ஜோதி என்பவரின் சடலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது மகன் கண் முன்னே தாய் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி. அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தனது சொந்த அக்காள் அஞ்சலையின் மகள் சிவகாமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததார். இந்நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவகாமியும், தாய் அஞ்சலையும் சென்றனர். இவர்கள் கணியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சென்றபோது பின்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் அஞ்சலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிவகாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்பே தாய் விபத்தில் பலியானதை பார்த்து சிவகாமி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் விஜயா (வயது 70). இவரது மகன் குமார் (40). சம்பவத்தன்று இவர் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். நிலையூர் சந்திப்பில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    இதில் விஜயா, அவரது மகன் குமார் ஆகியோர் கீழே விழுந்தனர். தலையில் காயமடைந்த விஜயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பே தாய் இறந்ததை பார்த்து குமார் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×