search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு"

    • குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
    • குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து குரங்கை தேடி கண்டு பிடித்தார். அந்த குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வகுப்பறையின் பின்வரிசையில் அந்த குரங்கு சாதாரணமாக அமர்கிறது.
    • பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என டுவிட்டர் பதிவு.

    ஹசாரிபாக்:

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.

    ​​மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 


    அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று இது குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டது. 


    முன்னதாக சில குரங்குகள் இணைந்து மொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 18 லட்சம் பாரவையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. குரங்குகளும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

    • தாய் குரங்கு லாரியில் அடிபட்டு காயமடைந்து துடிப்பதை கண்ட குட்டி குரங்கு அதன் அருகே சென்று தாயின் மீது தனது கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.
    • அந்த வழியாக சென்றவர்கள் பரிதாபப்பட்டனர். ஆனால் குரங்குக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், சிதுரு மாமுடி மண்டலம், முனுக்களூர் சாலையோரம் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் அங்குள்ள மரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தது. தாய் குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடக்க வேகமாக ஓடியது.

    அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று சாலையை கடக்க முயன்ற தாய் குரங்கு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு படுகாயம் அடைந்து வலியால் துடித்தது.

    தாய் குரங்கு லாரியில் அடிபட்டு காயமடைந்து துடிப்பதை கண்ட குட்டி குரங்கு அதன் அருகே சென்று தாயின் மீது தனது கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.

    அந்த வழியாக சென்றவர்கள் பரிதாபப்பட்டனர். ஆனால் குரங்குக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த வெங்கடேஷ் என்பவர் தாய்க்குரங்கை மீட்டு பால் வாங்கி ஊற்றி அதன் பின்னர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.

    தாய் குரங்கு காயம் அடைந்தது முதல் சிகிச்சை பெறுவது வரை குட்டி குரங்கு அதன் அருகிலேயே கண்ணீர் சிந்திய படி வேதனையுடன் இருந்தது. குட்டி குரங்கின் பாசத்தை கண்டு அனைவரும் வியந்து போயினர்.

    சிகிச்சை பெற்று வரும் தாய்குரங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை டாக்டர் தெரிவித்துள்ளார்.

    • குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ. வல்லாளபட்டி பஸ் நிலையம், செட்டியார்பட்டி சண்முகநாதபுரம், அரியப்பன்பட்டி சிலுப்பி பட்டி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட 7-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் வெளியே தொங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும், பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது. குரங்கினால் பொதுமக்கள் படும் அவஸ்தையை கண்டு வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வள்ளாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.

    அவருடன் தி.மு.க. பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் சென்றனர்.

    • பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் தொல்லை செய்து வந்தது
    • வனத்துறை அதிகாரிகள் குரங்கை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு தொல்லை இருந்து வந்தது.

    பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் தொல்லை செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை வனத்துறை அதிகாரிகள் குரங்கை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அண்ணா நகர் பகுதியில் குரங்கை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. அந்த கூண்டுக்குள் முட்டை மற்றும் தக்காளியை வைத்து குரங்கை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குரங்கு கூண்டுக்குள் வந்தது. பின்னர் அந்த கூண்டை மூடி குரங்கை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    குரங்கு பிடிபட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தார்.

    • திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.
    • வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×