என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நர்சு மாயம்"
- அருப்புக்கோட்டை அருகே வாலிபர்-நர்சு மாயமானார்கள்.
- ஆவியூர், வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று மனைவி வேலைக்கு செல்லுமாறு பிரபாகரனிடம் கூறி யுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதைத்தொடர்ந்து அவரது தந்தை சந்திரன் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரசோழன் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகள் மீனாள்(20). நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மீனா ஊருக்கு வந்தார். பெற்றோர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மகள் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார்? என கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதைத்தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு வீரசோழன் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
- மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு சாங்கை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அபிலாஷினி (வயது 21).
இவர் தக்கலை அருகே பள்ளியாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
வழக்கமாக மாலையில் வீடு திரும்பும் அவர், இரவு வரை வராததால் ராதாகிருஷ்ணன் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
அபிலாஷினி எங்கு சென்றார் என்பது தெரியாததால், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றார். இது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் மாயமானது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்