search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 247446"

    • தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும்.
    • பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் முன்னி லையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது பிரிவினை வாதத்தை முறி–யடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம். என்ற நோக்கத்தில் விழா கொண்டாடப்படும். இதில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வழிபாடுகள் தொடரும். மேலும் பல்வேறு புதிய இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் காகித கூழ், கிழங்கு மாவால் செய்ய ப்பட்டு வாட்டர் கலர் மூலம் வர்ணம் பூசப்பட்ட 3 அடி முதல் 11 அடி உயரம் வரை விநாயகர் திருமேனி தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழா–வானது வருகிற 31-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 6 -ந் தேதி வரை நடைபெறும்.

    குறிப்பாக தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும். குறிப்பாக தாளவாடியில் நடைபெறும் விழாவிற்கு தென் பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரனும், புளியம் பட்டியில் நடைபெறும் விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் இந்திய அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் கடிதப்போட்டியை நடத்த உள்ளது.
    • இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
    ×