என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹாக்கி வீரர்கள்"
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்துக்கு ஹாக்கி வீரர்கள் சென்றனர். அவர்கள் அங்குள்ள தயான்சந்த் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
ஹாக்கியில் இந்திய அணி 3 தங்கப் பதக்கத்தை வெல்ல காரணமாகத் திகழ்ந்தவர் மேஜர் தயானந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
- 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.
சென்னை:
15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கான கொண்டாட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றன.
- இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இம்மாதம் 18-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி, 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் இதில் பங்கேற்கவுள்ள இந்திய ஹாக்கி அணி நேற்று லண்டன் புறப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் புறப்படுவதற்கு முன் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கான கொண்டாட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றன. இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர்.
அதன்பின் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் விமானம் மூலம் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இம்மாதம் 18-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்