search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 248521"

    • நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
    • அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.

    நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.

    அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

    உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.

    சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
    • பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது.

    கடைசியாக கடந்த 1-ந்தேதி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் இருந்து 4-வது முறையாக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதில் பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது.

    பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 1.9. சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    ஆனாலும் பணவீக்கம் உயர்வு நீடிப்பதால் மீண்டும் வங்கிகளுக்கான கடன் வட்டியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பரில் மீண்டும் 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் என நிதி சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக நிர்ணயம்
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

    புதுடெல்லி:

    செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 7.0 சதவிகிதமாக இருந்தது. 

    சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த அளவை விட சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

    பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஆனாலும், சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    • உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்டவை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
    • இந்தியா தற்போது உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி உள்ளது.

    பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அரிசி உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகின்றன.

    இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், பாரதிய விவசாயிகள் சங்கம் நடத்திய சர்வதேச விவசாய மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கூறியுள்ளதாவது:

    உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்பதால் அவை அனைத்தும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர், அதனால் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். பணவீக்கத்திற்கும் உணவுப் பொருட்களின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

    கடந்த 75 ஆண்டுகளில்,விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பெருமைக்குரியது. இந்தியா உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவாக மாற்றியதற்காக அனைத்து அரசுகளும் பாராட்டுக்குரியது.

    விவசாயிகளின் அந்தஸ்தை உயர்த்த வேண்டியது அவசியம். அரசு விழாக்களில் கூட வழக்கறிஞர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் அழைக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் விவசாயிகளை யாரும் அழைப்பதில்லை.

    விவசாயத்தை கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற ஒரு இயக்கம் தேவை. இது கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேகமாக மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்கவும் உதவும்.

    விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் இல்லை, அவர்களின் வாழ்வாதாரம் மழை போன்ற பல வெளிப்புற காரணிகளைச் சார்ந்தே உள்ளது. விவசாய பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற சவால்களும் அவர்களுக்கு உள்ளன.

    விவசாய மாணவர்கள் இந்தியாவின் சிறந்த பாரம்பரிய விவசாய முறைளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×